எம்.எம்.ஜபீர்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட கூட்டம் நேற்று இரவு கண்டி ஓக்றீன் ஹோட்டலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் போது சம்மாந்துறை மக்களை கௌரவிக்கும் வகையில் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக பதவி வகித்து தற்போது பாராளுமன்ற தேர்தலில் உறுப்பினராக களமிறங்கிய எம்.ஐ.எம்.மன்சூரின் இடத்திற்கு புதிய கிழக்கு மாகாண சபை உறுப்பினராக ஐ.எல்.எம்.மாஹிர் நியமிக்கப்பட்டமைக்கு சம்மாந்துறை வாழ் மக்கள் கட்சித் தலைவருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றனர்.
சம்மாந்துறையில் கடந்த வாரம் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உரையாற்றும் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரை கிழக்கு மாகாண சபை உறுப்பினராக பிரகடணம் செயவதாக சம்மாந்துறை மக்களுக்கு வாக்குறுதியளித்தார்.
தேர்தலின் பின்னர் வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பதவி தேர்தலிற்கு முன்பாக வழங்கப்பட்டதன் காரணமாக மக்கள் மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கையை வலுவடையச் செய்துள்ளது.
அரசியல் அநாதையாக இருந்த சம்மாந்துறை மக்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெறும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இதனால் சம்மாந்துறை மக்கள் கட்சிக்கு நன்றிக் கடன்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ஐ.எல்.எம்.மாஹிர் ஒருசில தினங்களில் பதவியேற்கவுள்ள நிலையில் இவரின் சேவைகளை சிறப்புற மக்களுக்கு வழங்கவும் எதிர்காலத்தில் சிந்த அரசியல்வாதியாக விளங்கவும் சம்மாந்துறை வாழ் மக்களும், இளைஞர்களும், பிரதேச பொது அமைப்புக்களும் தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
