இக்பால் அலி
குருநாகல் மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைபெற்றுள்ளதாக குருநாகல் மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அதிகாரி காமினி இலங்கரத்தன தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;
குருநாகல் மாவட்டத்தில் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யவதற்காக 1266443 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். மாவட்டம் முழுவதிலும் 925 வாக்குகளிப் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சகல மத்திய நிலையங்களுக்கும் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.12000 அரச உத்தியோகஸ்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்
தேர்தல் செயற்பாட்டு மத்திய நிலையங்களான குருநாகல் தொழில் நுட்பக் கல்லூhரி, மலியதேவ ஆண்கள் கல்லூரி , மலியதேவ பெண்கள் கல்லூரி செர் ஜோன் கொத்தலவாவெல கல்லூரி ஆகிய இடங்களிலிருந்து சகல வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இம்மாவட்டத்தில் 12 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும் 14 சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் களமிறங்கியுள்ளனர். சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



