ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் நியமனத்தில் முரண்பாடு..!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளரை அகற்றியமையும், பதில் பொதுசெயலாளர் ஒருவரை நியமித்தமையும், சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாப்பி;ற்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அவரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயலாளருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் பிடியாணை பெறப்பட்ட போது நீதிமன்றத்தின் விதிகளை புறக்கணித்து செயற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக, சுதந்திர கட்சியின் பொது செயலாளரை அகற்றியமையும், பதில் பொதுசெயலாளரை நியமித்தமையும் ஏற்றுக்கொள்ள முடியாது என டிலான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, கூட்டமைப்பின் பொது செயலாளரை குறித்த யாப்பிற்கிணங்க அகற்றுவதற்கு நிறைவேற்று சபைக்கே அதிகாரம் உள்ளது.

அத்துடன், பதில் செயலாளரை நியமிக்கக் கூடிய அதிகாரமும் நிறைவேற்றுச் சபைக்கே உள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -