வை.எம்.பைரூஸ்-
எனக்கும் எனது கட்சிக்கும் இப்பிரதேசத்தில் அதிகரித்துள்ள மக்கள் செல்வாக்கை இல்லாமல் செய்து, தேர்தலில் எப்படியாவது வென்று விடலாம் என்ற நோக்கில் இவ்வாறான ஈனச் செயல்களில் அவர் இறங்கியுள்ளத்தை இப்பிரதேச மக்கள் நன்கறிவார்கள்.
இதன் தொடரில் நேற்றைய தினம் இப்பிரதேசத்திலுள்ள பாளிவாயல்களை தனது அரசியல் ஆதாயத்திற்காக தவாறான முறையில் பயன்படுத்தி ஆதரவு தேட முற்பட்டதையும் மூக்குடைபட்டதையும் குறிப்பிடுவதுடன், அதன் தொடரிலேயே இக்கொலையும் அரசியலாக்கி ஆதாயம் தேட முற்படுவதுடன், தனது ஆதரவாளர்களை வைத்து, முக நூல் போன்ற சமூக வலைத்தளங்களிலும் தனக்கு சார்பான ஊடகங்களிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் மக்களை உசுப்பேத்தும் கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றார்.
கடந்த காலங்களிலும் இவ்வாறான அரசியலையே இப்பிரதேசத்தில் செய்து வந்த அவரை மக்கள் புறக்கனித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது, உயிர் அச்சுறுத்தல் போன்ற முன்னர் ஈடுபட்டு கடந்த காலத் தேர்தல்களை எதிர்கொண்டது போன்றே இம்முறையும் தேர்தலை எதிர்கொள்ள முனைகிறார்.
இதனை அமீர் அலி அவர்கள் உடனடியாக நிறுத்துவதுடன் தனது அரசியல் இலாபத்துக்காக இளைஞர்களை உசுப்பேறி உயிர்ப்பலி கொடுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இது விடயத்தில், எனது ஆதரவாளர்களும் இளைஞர்களும் அமைதி காப்பதுடன், தேர்தல் விதி முறைகளைப் பேணி நடந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்வதோடு முக நூல் போன்ற சமூக வலைத்தளப் பாவனையாளர்களும் ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் பக்க சார்பின்றி நடுநிலையினைக் கடைப்பிடித்து மக்களுக்கு உண்மையினை எடுத்துச் சொல்ல முன்வர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன், அநியாயமாகப் பறிக்கப்பட்டுள்ள சகோதரர் விடயத்தில் பக்கச் சார்பற்ற நீதியான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதோடு, அவரது பிரிவால் துயரமடைந்துள்ள குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
