ஐக்கிய மக்கள் சுத்தந்திர கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பெயர் தேசிய பட்டியலுக்காக இன்று அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து முன்னாள் பிரதி அமைச்சரின் காத்தான்குடி ஆதரவாளர்களால் வீதிகளில் பட்டாசு கொளுத்தி இவ்வறிவித்தலை பெரும் வெற்றி விழாவாக கொண்டாடிய போது, பல சட்ட மீறல்களும் அசம்பாவிதங்களும் இடம்பெற்றுள்ளது.
இக்கொண்டாட்டங்களினால் இதுவரை 5 மாத கர்ப்பிணி தாய் உட்பட 13 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிய வருகிறது. இதில் 6 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் 3 பேரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒருவரும், ஐக்கிய தேசிய கட்சியூடாக ஒருவரும் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் அனைவரும் தங்களுடைய வெற்றியை அமைதியான முறையிலும் வன்முறைகள் இல்லாமலும் கொண்டாடியுள்ள நிலையில், 127 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் தேசியப்பட்டியல் அறிவிப்பை வன்முறைகளோடு கொண்டாடியது மிகவும் கவலையளிப்பதாக பாதிக்கப்பட பலர் குறிப்பிடுகின்றனர்.சாஜில்
- அமைச்சர் ஹக்கீம் கண்டனம்...
- அலிசாகிர் மெளலான கண்டனம்..





