ஏன் பொத்துவில், ஒலுவில் முஸ்லிம்களின் காணிகளை நல்லாட்சி அரசாங்கத்தினால் கையளிக்க முடியாது?ஹரீஸ்

ஹாசிப் யாஸீன்-

யாழ்ப்பாணத்திலும், சம்பூரிலும் உச்ச பாதுகாப்பு வலயமாக கருத்தப்பட்ட காணிகளை தமிழ் மக்களுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் கையளிக்க முடியுமென்றால், ஏன் பொத்துவில், ஒலுவில் பிரதேச முஸ்லிம்களின் காணிகளை இந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் கையளிக்க முடியாது என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பொத்துவிலில் இடம்பெற்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பி பேசினார்.

நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோரினது வெற்றிக்கு வாக்களித்த பொத்துவில் பிரதேச மக்களின் காலடிக்குச் சென்று நன்றி தெரிவிக்க நேற்று வெள்ளிக்கிழமை (29) பொத்துவிலுக்கு விஜயம் செய்தனர்.

அங்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் எம்.ஐ.எம்.மன்சூருக்கு பொத்துவில் மக்களால் வரவேற்பளிக்கப்பட்டது.

இதனை அடுத்து பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஐ.வாசித் தலைமையில் பொத்துவில் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நன்றி நவிலல் கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

இன்று நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சியின் பெரும் பங்காளர்கள் தமிழ், முஸ்லிம் மக்களாகும். இந்த நல்லாட்சியின் அனுகூலங்களை எமது முஸ்லிம் மக்களும் அனுபவிக்க வேண்டும்.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் எமது கட்சி அம்பாறை மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்று மாவட்டத்தை கைப்பற்றியுள்ளது.இவ்வெற்றிக்காக நம்பிக்கையோடு கட்சிக்கும், எமக்கும் வாக்களித்த பொத்துவில் வாழ் மக்களுக்கும், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இத்தேர்தல் வெற்றியின் பிற்பாடு அம்பாறை மாவட்;ட மக்கள் கட்சியோடு பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பதை எங்களால் உணரமுடிகின்றது. அந்த எதிர்ப்பார்ப்புக்கள் அனைத்தையும் எமது கட்சிக்கு கிடைக்கவிருக்கின்ற அம்பாறை மாவட்ட அரசியல் அதிகாரத்தைக் கொண்டு கட்சியின் தலைமையோடு நாங்கள் இணைந்து நிறைவேற்றுவோம்.

யாழ்ப்பாணத்திலும், சம்பூரிலும் உச்ச பாதுகாப்பு வலயமாக கருத்தப்பட்ட காணிகளை தமிழ் மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள நிலையில், எமது பொத்துவில், ஒலுவில் மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படுவதை நாம் எனிவரும் காலங்களில் அனுமதிக்கப் போதில்லை. இக்காணிகளை மக்களிடம் கையளிக்கும் நடவடிக்கைகளை கட்சித் தலைமையோடு இணைந்து நாம் விரைவாக மேற்கொள்ளவுள்ளோம். மேலும் பொத்துவில் மக்கள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வுகளைப் பெற்றுத்தருவேன்.

இந்த நல்லாட்சியின் பங்காளிகள் நாம். எமது மக்களின் காணிப் பிரச்சினைகளானாலும் சரி, அபிவிருத்தியானாலும் சரி, தொழில் வாய்ப்புக்களானாலும் சரி இனிவரும் காலங்களில் விட்டுக் கொடுப்புக்கே இடமில்லை அதனை எவ்வழியிலேனும் எம்மக்களுக்கு இவ்வரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொடுத்தேயாகுவோம் எனவும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில்; பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் எம்.தாஜூதீன், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள், கட்சிப் போராளுகள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -