பிரதி பிரதமராக முன்னாள் அமைச்சர் பௌசி ?

டந்து முடிந்த தேர்தலில் வெற்றிலை கூட்டணி வெற்றி பெருமிடத்து மஹிந்தவை பிரதமர் ஆக்க முடியாது எனவும் அதற்கு பொருத்தமான எழுவரின் பெயர்களை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் பௌசியை தவிர அனைவரும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி கலைக்கப்படவுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் ஜே.வி.பி. செயலாளர் டில்வின் சில்வா ஆகியோருக்கிடையில் கைச்சாத்தான ஒப்பந்தம் ஒன்றின் மூலமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உருவானது.

சுமார் 11 ஆண்டுகளாக இக்கூட்டணி அதிகாரத்தில் இருந்துள்ளது.

இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளின் அநீதியான தலையீடுகளைத் தவிர்க்கும் பொருட்டு கூட்டணியை கலைத்துவிட அதன் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தீர்மானித்துள்ளார்.

பெரும்பாலும் எதிர்வரும் 24ம் திகதி கூட்டணியைக் கலைப்பது தொடர்பான அறிவித்தல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் பின்னர் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ள சுதந்திரக் கட்சிக்கு பிரதிப் பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளது.

இப்பதவிக்கு பௌசி அல்லது நிமால் சிறிபால டி சில்வா நியமிக்கப்படவுள்ளததாகாக தெரிய வந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -