கல்குடாவிலிருந்து களமிறக்கப்பட்ட பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களி்ன் வெற்றியானது உண்மையில் யாரும் நம்பாத ஒன்றே ஏனெனில் இதுவரை காலமும் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக மட்டக்கப்பு மாவட்டத்தில் பாராளுமன்றம் சென்ற முஸ்லிம்கள் என்று சொல்வதற்கு யாருமே இல்லை ஆனால் இம்முறை அமீர் அலி அவர்கள் தமிழ் மக்களுக்கு அரிசி மூட்டையையும் பண மூட்டையும் வாரி வழங்கி முன்னால் பாராளு மன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி ஐயா அவர்களையும் தன் பக்கம் சாய்த்து இம்முறை பாராளு மன்றம் தேர்வாகியவர்தான் இந்த அமீர் அலி ஆவார்கள் என்பதை மக்கள் அறிந்து வைத்து இருக்கிறார்கள்
ஆனால் இந்த வெற்றியானது அமீர் அலிக்கு கல்குடா வாழ் முஸ்லிம் மக்களே மனம் விரும்பி தேர்வு செய்த வெற்றியுமல்ல என்பதை அவருக்கு கல்குடாவில் கிடைத்த மிகக் கனிசமான வாக்கு சான்றாகும் 13129 வாக்குகளையும் தபால் மூலமாக 546 வாக்கு களையும் பெற்றுக் கொண்டு எவ்வாறு அமீர் அலி வெல்ல முடியும் என்பதை மக்களாகிய நீங்களே சிந்தியுங்கள்….?
இது வரை காலமும் முஸ்லிம்களுக்கு வாக்களிக்காத தமிழ் மக்கள் இம்முறை அமீர் அலிக்கு மாத்திரம் எதற்காக 2933 வாக்குகளை தாரை வார்த்தார்கள் பணத்துக்காகவா அல்லது ஏதும் தனிப்பட்ட உடன் படிக்ககையா என்பதை மக்களாகிய நீங்களே சிந்தியுங்கள்…?
அது மட்டு மன்றி ஏதோ அல்லாஹ்வின் நாட்டத்தால் வெற்றியை தனதாக்கிக் கொண்ட அமீர் அலி அவர்கள் தனது வெற்றியின் பிற்பாடு சரி மௌனம் காப்பாரா என்று எதிர் பார்த்த கல் குடா வாழ் முஸ்லிம்கள் அதன் பிறகும் பிரதேச வாதத்தை தூண்டி மக்களை குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டு இருக்கிறார் என்பதே வேடிக்கையாகும் ஆனால் ஜனாசாவின் மீது நின்று அரசியல் செய்த அமீர் அலிக்கு இதுவெல்லாம் ஒரு பொருட்டே இல்லாமல் போகலாம் ஆனால் நாம் உண்மையை மக்களுக்கு எடுத்துக் கூற கடமைப்பட்டுள்ளோம்.
இன்று புது புறளியாக அமீர் அலி அவர்களும் அவரின் அடி வருடி ஆதரவாளர்களும் மூச்சுக்கு ஒரு முறை கூறித் திரிவது தனக்கு வாக்களிக்காத கல் குடா வாழ் முஸ்லிம்கள் அனைவரும் முனாபீக்குகள் என்று இதிலும் வேடிக்கை என்ன வென்றால் கல்குடாவிலிருந்து ஏறாவூரைச் சேர்ந்த அலி சாஹீர் மவ்லானாவுக்கு 5000 வாக்குகள் பணத்ததை வாங்கிக் கொண்டு காங்கிரஸ் போராளிகளால் போடப் பட்டுள்ளதாகவும் வதந்தியை கிளப்பி மக்களை குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார் இந்த அமீர் அலி ஆனால் உண்மையில் கல்குடாவிலிருந்து அலிசாஹீர் மவ்லானாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் வெறும் 516 ஆகும்
இப்படி முற்று முழுதாக தமிழ் மக்களி்ன் வாக்குகளால் வெற்றியை தனதாக்கிக் கொண்ட அமீர் அலி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பகிரங்கமாக ஒரு மேடையில் பேசி இருக்கிறார் இம்முறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸானது கிழக்கு மாகாணத்தில் காங்கிரஸின் வளர்ப்பிடமான அம்பாறை மாவட்டத்தில் அந்த கட்சியானது ஒரே ஒரு ஆசனம்தான் பெறும் என்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஆசனுமில்லை என்றும் கூக்கிரலிட்டு தலைக்கணத்துடன் பேசியிருக்கும் இந்த அமீர் அலி அப்படி கிடைத்தால் தனது தொழுகை நோன்பு ஸகாத் ஹஜ் அனைத்துமே பாலகிவிடும் என்று அற்ப சொற்ப பதவிக்காக மார்க்கத்தை மறந்து பேசிய சகோதரர் அமீர் அலியா முனாபீக்..? அல்லது வெறுமனே தனது ஜனநாயக உரிமையான வாக்கு உரிமையை தனக்கு விரும்பியவர்களுக்கு அளித்த பொது மக்களா முனாபீக் என்பதை அனைத்துலக முஸ்லிம்களும் சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம் ..?
தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னராக மர்மமான மனிதனால் சுட்டுக் கொள்ளப்பட்ட சகோதரர் அமீன் அவர்களின் கொழையை அரசியல் ஆக்கி காங்கிரஸின் வேற்பாளர் றியாழ் அவர்களின் மீதும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் மீதும் தக்க ஆதாரம் ஏதுமின்றி பலியை சுமத்தி அரசியல் ஆதாயம் தேடிய இந்த அமீர் அலி உண்மையில் யோக்கியமானவரா என்பதை மக்களே கொஞ்சம் சி்ந்தியுங்கள்…?
அந்த கொழையானது குடும்ப பிரச்சினையால் தான் நடை பெற்று உள்ளதாகவும் அதில் எந்தவித அரசியல் பிரச்சினையும் இல்லை என்றும் தற்போதய பொலிஸ் விசாரனைகளிலிருந்து தெறிய வந்துள்ளதை நாம் அறிவோம் ஆனால் இந்த அமீர் அலி அவர்கள் தனது வெற்றியை எப்படியாவது உறுதி செய்து தனது பதவியைக் தக்க வைத்துக் கொள்ள செய்த தில்லு முல்லு விளையாட்டே இது அனைத்தும் என்று காலப்போக்கி்ல் மக்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள் என்று ஆணித்தரமாக கூறிக் கொள்கிறேன்
பர்ஸான் எஸ் முஹம்மது
அட்டாளைச்சேனை.
