திருகோணமலை -கல்முனை தனியார் பேரூந்து ஏறாவூர் பொலிஸ் பிரிவில் விபத்து -படங்கள்

ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்-

ட்டக்களப்பு-ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செங்கலடி பிரதேசத்தில் 30.08.2015 முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பயணிகள் பஸ் வண்டியொன்றும் டிப்பர் வண்டியொன்றும் சேமடைந்துள்ளன.

திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கிச் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ் வண்டி அதே வழியில் சென்றுகொண்டிருந்த டிப்பர் வண்டியை முந்திச் செல்ல முற்பட்டவேளையில் ஒன்றுடன் மற்றையது மோதி பினனர் அந்த பஸ் வண்டி வீதியோரமிருந்த தொலைபேசிக் கம்பத்துடன் மோதியுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் தொலைபேசிக் கம்பமும் சேதமடைந்துள்ளது.

எனினும் பஸ்வண்டியில் பயணம்செய்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -