மக்களைத் தாக்குவதும் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுவதும் தொடருமாக இருந்தால் தேசியப்பட்டியல் அல்ல ஒருபட்டியலும் கிடைக்காமல் இருக்கும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆதரவாளர்களை அடக்காவிட்டால் ஹிஸ்புல்லாவின் தேசியப்பட்டியல் கேள்விக்குறியாகும்- ஹக்கீம் எச்சரிக்கை
நடைபெற்று முடிந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுதோல்வியடைந்து மனமுடைந்து வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள் ஹிஸ்புல்லாவிற்கு தேசியப்பட்டியல் அறிவித்ததும் அங்கு அட்டகாசத்தில் ஈடுபட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் சிலர் வைத்திய சலையிலும், பள்ளிவாசல் ஒன்று உடைக்கப்பட்டுள்ளதாகவும், வீடுகள், கடைகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து உடனடியாக பொலிஸ்மா அதிபருக்கும், ஜனாதிபதிக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாக அமைச்சின் இணைப்பாளர் முபீன் இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
