ACMCயின் விருப்பு வாக்குகள் திங்கள் வெளியாகும்: வாக்களித்த மக்களுக்கு நன்றிகள் - சிராஸ் மீராசாஹிப்

அகமட் எஸ். முகைடீன்-

பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கும் எனது ஐந்தாம் இலக்கத்திற்கும் வாக்களித்த அம்பாறை மாவட்ட வாக்காளர்களுக்கு உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக சிராஸ் மீராசாஹிப் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்;

அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதல் முறையாக பாராளுமன்றத் தேர்தலில் களம் இறங்கியது. அதன் அறிமுக நுழைவினிலேயே அம்பாறை மாவட்டத்தின் 33000 மக்களின் மனங்களில் இடம்பிடித்திருக்கின்றது. 

எமது கட்சியானது அண்ணளவாக 2500 வாக்குகள் குறைவினாலேயே ஒரு ஆசனத்தை இழந்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். எமது கட்சிக்கும் எனக்கும் வாக்களித்த மக்கள் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள். எதிர்காலத்தில் எமது கட்சியின் வளர்ச்சிக்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற காத்திருக்கின்றோம். இதனால் எதிர்காலத்தில் எமது கட்சியின் வளர்ச்சி இதனைவிட அபரிதமாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

நான் பெற்ற விருப்பு வாக்குகள் எத்தனை என்பதை அறிவதில் எனக்கு வாக்களித்த மக்கள் ஆர்வத்துடன் காணப்படுகின்றனர். திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து எமது கட்சி வேட்பாளர்கள் எவரும் பாராளு மன்றத்திற்கு தெரிவு செய்யப்படாமையினால் எமது கட்சி வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் உத்தியோக பூர்வமாக இதுவரையில் வெளியிடப்படவில்லை. அவ்விருப்பு வாக்குகள் எதிர்வரும் திங்கட்கிழமையளவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவிருக்கின்றது.

எனக்கும் எமது கட்சிக்கும் வாக்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இறைவன் நல்லருல் புரியவேண்டும் எனப் பிராத்திப்பதாகவும் எமது சமூகப் பணி என்றும் எத்தடையுமின்றி தொடரும் எனவும் குறிப்பட்டார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -