தேசிய அரசாங்கம் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் வாலாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மாற்றுவதாகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு இன்று அழைக்கப்பட்டிருந்த விமல் வீரவன்ஸ், விசாரணைகளின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பட ஆட வைப்தே இந்த தேசிய அரசாங்கமாகும்.அத்துடன் ரணில் விக்ரமசிங்கவின் சிறுபான்மை அரசாங்கத்திறகு பெரும்பான்மை பலத்தை வழங்குவதாகும்.
இந்த காட்டிக்கொடுப்புக்கு நாங்கள் இணங்க போவதுமில்லை. ஏற்க போவதுமில்லை. அங்கீகரிக்க போவதுமில்லை. பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 95 ஆசனங்கள் கிடைத்துள்ளன.
தேர்தல் சட்டங்களை மீறி, ஐக்கிய தேசியக் கட்சி சகல ஊடகங்களையும் தன்வசப்படுத்தியிருந்த நிலையில், இந்த எண்ணிக்கை கிடைத்தது.
அண்மைய கால வரலாற்றில் 95 உறுப்பினர்களை கொண்ட பலமான எதிர்க்கட்சி உள்ளது. கடந்த காலங்களில் சுமார் 40 பேரை கொண்ட எதிர்க்கட்சியே இருந்தது.
அத்துடன் பெரும்பான்மை பலத்தை பெறாத கட்சிக்கு எதிர்க்கட்சியில் இருந்து உறுப்பினர்களை இணைத்து அரசாங்கத்தை அரசாங்கத்தை ஏற்படுத்துவது அரசியல் காட்டிக்கொடுப்பாகும்.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தேசிய அரசாங்கத்துடன் இணைக்கும் போது ஆர். சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக தெரிவாவார்.ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை செப்டம்பர் இறுதியில் வெளியிடப்பட உள்ளது.
ஆர். சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைப்பது என்பது மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் போது அதில் உள்ள விடயங்கள் உண்மையானது என உலக முழுவதும் எடுத்துச் செல்ல வாகனத்தை பெற்றுக்கொடுத்து ஆகிவிடும்.
இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை. சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டு சேர வைக்கின்றனர்.
இதனால், நாங்கள் தேசிய அரசாங்கத்திற்கு இணங்க போவதில்லை. தேசிய அரசாங்கத்திற்கு இணங்காத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மகிந்த ராஜபக்ச தலைமையில் நாங்கள் செயற்படுவோம் எனவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.
