பிரதமர் வாக்களித்தவாறு சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபையை உடன் பிரகடனப்படுத்த வேண்டும் - பிரதிமுதல்வர் மஜீத்

எம்.வை.அமீர்எம்.ஐ.சம்சுதீன்-

ண்மையில் தேர்தல் பரப்புரைக்காக கல்முனைக்கு வருகைதந்திருந்த இலங்கை ஜனநாயக குடியரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சாய்ந்தமருது மக்களுக்கு வாக்களித்தவாறு அம்மக்களின் அபிலாசைகளில் ஒன்றான உள்ளுராட்சிசபையை உடன் பிரகடனப்படுத்துமாறும் இப்பிராந்திய மக்களுக்கு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் வாக்களிக்கப்பட்ட மட்டக்களப்பில் இருந்து பொத்துவில் வரை புகையிரத பாதை அமைப்பது என்ற உத்தரவாதங்களை நிறைவேற்றித்தருமாறு கல்முனை மாநகரசபையின் இம்மாதத்துக்கான அமர்வு 2015-08-31 ல் பிரதிமுதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத் தலைமையில் இடம்பெற்றபோது சபை அக்கிராசனத்தில் இருந்து, பிரதிமுதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத் இந்த கோரிக்கைகளை விடுத்தார்.

கல்முனை மாநகரசபையில் நீண்ட காலமாக உறுப்பினராகவும் எதிர்க்கட்சித்தலைவராகவும் பணியாற்றி அண்மையில் இறையடியேயைதிய அமிர்தலிங்கம் அவர்களுக்கான அனுதாப பிரரணையை தொடர்ந்து உறுப்பினர்கள் உரையாற்றும் சந்தர்ப்பத்தில் மாநகரசபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் அவர்கள கல்முனை மாநகரசபையின் சில செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டு உரையாற்றும் போது சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபையின் அவசியம் பற்றியும் எடுத்துக்கூறினார் இதன்போதே சபைக்கு தலைமை தாங்கிய பிரதிமுதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -