புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் நாளை ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமைச்சர்கள் 40 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 10 பேரும், பிரதி அமைச்சர்கள் 30 பேரும் நாளை சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
2
தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நாளை திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
நாளை நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையில் ஏற்கனவே காணப்பட்ட அமைச்சுக்களில் மாற்றங்கள் பல நிகழும் என அரசியல் வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
