1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளமை முதல் குடும்பம் - மஹிந்த குடும்பமே

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் முறைகேடாக 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளமை குறித்து சாட்சியங்களுடன் தகவல்கள் கிடைத்தருப்பதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை ரூபா மதிப்பில் இந்த தொகையானது 20 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேல் என கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் ராஜபக்ச குடும்பத்தினர் எந்த வழியில் இந்த பணத்தை உழைத்தனர் மற்றும் எவ்வாறு வெளிநாடுகளுக்கு கொண்டு சென்றனர் என்பது குறித்த தகவல்களை கண்டறிவது சிரமமான காரியம் என தெரிவிக்கப்படுகிறது.


சர்வதேச நிபுணர்களின் உதவியை பெற்று தகவல்களை உறுதிப்படுத்தி வருவதாகவும் வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகளுக்கு மேலும் சில வருடங்கள் செல்லும் எனவும் பேசப்படுகிறது.


இலங்கை மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சில வர்த்தகர்கள் ராஜபக்சவினரின் இந்த நிதி பரிமாற்றங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வர்த்தகர்கள் தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்களுடன் நெருங்கி செயற்படுவதால், விசாரணை நடவடிக்கைகளுக்கு தடையேற்பட்டுள்ளது.


மகிந்த ராஜபக்ச தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக செயற்படாமல் இருக்கவும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காகவும் இரண்டு தரப்பினருக்கும் இடையில் இணக்கத்தை ஏற்படுத்த இந்த வர்த்தகர்கள் ஏற்கனவே ஆயிரக்கணக்கான மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவருக்கு இந்த விடயம் சம்பந்தமாக 500 மில்லியன் ரூபா அன்பளிப்பதாக வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த புரிந்துணர்வு இணக்கப்பாடுகளின் அடிப்படையிலேயே மகிந்த ராஜபக்ச, பிரதமரின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -