அவதானி-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து அக்கட்சியின் ஸ்தாபகர் மர்ஹூம் அஷ்ரபை ஒதுக்கி அரசியல் பலமற்ற ஒருவராக அவரை ஒதுக்க அன்று ஐக்கிய தேசிய கட்சியில் இருந்த முஸ்லிம்களில் முக்கிட பங்கினை பொத்துவில் அரசியலில் முன்னிலையில் இருந்தவர் SSP மஜீத்.
ஆனால் மர்ஹூம் அஷ்ரப் மரனிக்கும்வரை அக்கட்சியின் பக்கமும் திரும்பிக்கூட பார்க்காத SSP மஜீட் அஸ்ரபின் மரணத்திற்குப்பின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பக்கம் சென்றிணைந்து கொண்டார்.
அக்கட்சியில் இணைந்து நான் மறணிக்கும்வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில்தான் இருப்பேன் என்று கூறி கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு மாகாணசபையில் ஒரு சிறந்த பேச்சாளராகவும் மக்களின் குறைபாடுகளை சபையில் எடுத்தியம்பும் ஒரு மக்கள் பிரநிதியாகவும் அங்கு செயல்பட்டவர் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
அது அவ்வாறிருக்க கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்விடைந்த மஜீட் தன் தோல்விக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீம்தான் காரணம் என்று விமர்சனங்களை வெளியிட்டு அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் தனது பழைய வீடான ஐக்கிய தேடியகட்சிக்கே சென்றுள்ளேன் அதுதான் எனக்கு சரியான அடைக்கலம் என்று அறிக்கை விட்டார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியின் வெற்றிக்கு முழுமூச்சாகச் செயல்பட்ட SSP மஜீட் இம்முறை பொதுத் தேர்தலில் பொத்துவில் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடவுள்ளதாக அறிவித்திருந்தார்.
ஆனால் எல்லாமே தலைகீழாக மாறிய செய்தி இடிமுழக்கமாகப் பரவியுள்ளது SSP மஜீதை ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக இருக்கும் அம்பாரையைச் சேர்ந்த தயாகமகே வெட்டிவிட்டார் என்றபதனால், செய்வதறியாமல் திகைத்துப்போயிருக்கும் மஜீதுக்கு அவரின் ஆதரவாளர்கள் உடனடியாக தேர்தலில் போட்டியிட வேறுகட்சி ஒன்றுடன் இணைந்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருகின்றனர்.
அதனால் மஜீத் எக்கட்சியில் இணைந்து தேர்தலில் களம்மிறங்குவார் அல்லது அமைதியாக இருப்பாரா என்ற கேள்வி இன்று பொத்துவில் மக்கள் மனங்களில் மேலிட்டுள்ளது. என்ன நடக்குது இந்த நாட்டிலே என்ற பாடல் இன்று சிலருடைய முனுமுனுப்பாக இருப்பதும் காதுகளில் ஒலிப்பதாக எமது இம்போட் மிரர் அவதானி குறிப்பிட்டுள்ளார்.
