முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடவில்லை என்பதற்காக ஹம்பாந்தோட்டை மக்களுக்கு எந்தவித அநியாயங்களும் இடம்பெறமாட்டாதென்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐ.ம.சு.கூ சார்பாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவில் கைச்சாத்திட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை மக்களுக்காக தான் போட்டியிடுவதாகவும், மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவே மஹிந்த ராஜபக்ஷ இந்த தேர்தலில் போட்டியிடுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
