ஹட்டன் - கண்டி தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில்!

 க.கிஷாந்தன்-

ட்டன் - கண்டி தனியார் பஸ் ஊழியர்கள் 10.07.2015 அன்று காலை முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  கண்டி பஸ் தரிப்பிடத்தில் மாகாண சபை நேரக்கணிப்பாளர் ஒருவர் தனியார் பஸ் சாரதியை தாக்கிய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படுகிறது. 

நேற்றைய தினம் சரியான நேரத்திற்கு கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி பஸ் செல்ல இருந்தபோது நேரக்கணிப்பாளர் சாரதியை தாக்கி அநாவசிய தண்டப் பணம் அறவிட்டுள்ளார். 

இதனால் ஹட்டன் - கண்டி வீதியில் பயணிக்கும் 15 தனியார் பஸ்களின் ஊழியர்கள் 10.07.2015 அன்று காலை தொடக்கம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் இ.போ.ச பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -