தேசியப்பட்டியல் ஊடாக பாராளமன்றம் செல்கிறார் மாகாணசபை உறுப்பினர் ஜெமீல்..!

எம்.வை.அமீர்-

திர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தேசிய ரீதியில் கட்சிகள் கூட்டினைந்த இரு சக்திவாய்ந்த அணிகளும் மற்றும் சிறுகட்சிகளும் களமிறங்குகின்றன.

இவற்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன ஐக்கிய தேசிய முன்னணியில் சில இடங்களில் இணைந்து களமிறங்குகின்றன.

பொதுத்தேர்தலுக்குரிய நியமனப்பத்திரம் தாக்கல் செய்யும் இறுதி தினம் இன்றுடன் முடிவடைந்துள்ளதால் கட்சிகள் தங்களுக்கான தேசியப்பட்டியல்களை வெளியிட்டுள்ளன அந்த அடிப்படையில் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு வாக்களிக்கப்பட்ட தேசியப்பட்டியல் பெயர்களும் வெளியாகியுள்ளன.இதில் அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு மாறிச்சென்ற கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலது பெயர் ஏழாவது இடத்தில் போடப்பட்டுள்ளதால் அவர் நிற்சயிக்கப்பட்ட பாராளமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட வாய்ப்புள்ளதாக பலராலும் பேசப்படுகின்றது.

முஸ்லிம் காங்கிரசின் செயற்பாடுகளில் அதிருப்தியுற்ற ஜெமீல் அமைச்சர் றிசாத் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைத்து கொண்டதன் பயனாக தேசியப்பட்டியல் ஊடாக பாராளமன்றம் செல்வதற்குரிய வாய்ப்பு ஜெமிலுக்கு வழங்கப்பட்டதையிட்டு. அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு அதிக வாக்குகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் பரவலாகப்பேசப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -