எம்.வை.அமீர்-
எதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பில் நியமனப்பத்திரங்களை தாக்கல்செய்து விட்டு ஊர் திரும்பிய கலாநிதி சிராஸ் மீராசாஹிப் மருதமுனையைச் சேர்ந்த நாதீர் மற்றும் அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் உள்ளிட்ட குழுவினருக்கு சாய்ந்தமருது மக்களால் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
அமைச்சார் றிசாத் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் பொதுத்தேர்தல் ஒன்றில் களமிறங்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். பிரபல்யமிக்கவர்களை களத்தில் இறக்கியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
ஊர்வலத்தின் இறுதியில் சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளி வாசலில் துஆ பிராத்தனையும் சினேகா சாந்தியும் இடம்பெற்றது.





