மைத்திரி விரும்பாவிடினும் மஹிந்தவை பிரதமராக்குவோம் -சுதந்திர முன்­னணி

ஹிந்­தவின் பலம் என்­ன­வென்­பதை அனு­ரா­த­புரம் கூட்­டத்­துடன் ரணில் விளங்­கிக்­கொண்­டி­ருப்பார். மஹிந்­த­வுடன் நேருக்­குநேர் மோதி ரணி­லினால் வெற்­றி­பெற முடி­யாது என ஐக்­கிய மக்கள் சுதந்திர முன்­னணியின் தலைவர்கள் தெரி­வித்­தனர்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விரும்­பா­விட்­டாலும் மஹிந்­தவை பிர­த­ம­ராக்கிக் காட்­டுவோம் எனவும் அவர்கள் சவால் விடுத்­தனர்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் உறுப்­பி­னர்­களால் நேற்று எதிர்க்­கட்சி தலைவர் அலு­வ­ல­கத்தில் நடத்தப்பட்ட செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போதே அவர்கள் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டனர். இதில் கருத்து தெரி­வித்த முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்­பி­டு­கையில்,

ஆட்சி மாற்­றத்தின் பின்­ன­ரான இந்த எழு­மாத காலத்தில் நாட்டின் நிலை­மை முழு­மை­யாக மாற்றம் கண்­டுள்­ளது. அதேபோல் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்ட பின்­னரும் அர­சாங்கம் பாரா­ளு­மன்ற விதி­மு­றை­க­ளுக்கு மாறான வகையில் செயற்­பட்டு வரு­கின்­றது.

இந்த காலப்­ப­கு­தியில் வெளி­நாட்டுக் கடன்­களை அர­சாங்கம் வாங்­கி­யுள்­ளது, பல விலை­மனுக் கோரல்­களை செய்­துள்­ளது, அதேபோல் தேர்தல் சட்­ட­திட்­டங்­களை மீறும் வகையில் செயற்­பட்டு வரு­கின்­றது. இவை அனைத்­தையும் தடுத்து நிறுத்த வேண்டும். கடந்த ஆட்­சியில் சட்­ட­திட்­டங்கள் எவ்­வாறு கையா­ளப்­பட்­டன என்­பதை இப்­போது மக்­களால் நன்­றாக உணர முடியும். இவை அனைத்­துக்கும் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி மாற்றம் ஒன்றின் மூலம் முடி­வு­கான நாம் தயா­ராக உள்ளோம்.

மேலும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி இம்­முறை தேர்­தலில் வெற்றி பெறும் என்ற எண்ணம் அனைவர் மத்­தி­யிலும் ஏற்­பட்­டுள்­ளது. ஜனா­தி­ப­தியே அதை ஏற்­றுக்­கொண்­டுள்ளார். அத­னால்தான் கட்சி வெற்­றி­பெற்­றாலும் மஹிந்­தவை பிர­த­ம­ராக நிய­மிக்க முடி­யா­தென ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். ஆனால் ஜனா­தி­ப­தியால் இந்த விட­யத்தில் தனித்து முடி­வெ­டுக்க முடி­யாது.

 பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை ஆத­ரவு யாருக்கு கிடைக்­கின்­றதோ அவ­ரையே பிர­த­ம­ராக நிய­மிக்க வேண்டும். அந்த வகையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் முழு­மை­யான ஆத­ரவு மஹிந்த ராஜபக் ஷவுக்கே உள்­ளது. நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து மஹிந்­தவின் பெய­ரையே பரிந்­து­ரைப்போம். ஆகவே அவ்­வா­றான நிலையில் ஜனா­தி­ப­தியால் மஹிந்­தவை நிரா­க­ரிக்க முடி­யாது. ஆகவே எதிர்­வரும் தேர்­தலின் பின்னர் மீண்டும் மஹிந்­தவை ஆட்­சிக்கு கொண்­டு­வந்தே தீருவோம்.

மேலும் நாட்­டை­ஆளும் பலம் நடை­மு­றையில் உள்ள அர­சாங்­கத்­துக்கு இல்லை. அவர்­களால் குறு­கிய காலத்தில் பல­மான ஆட்­சியை செய்து காட்ட முடி­யாத நிலையில் அடுத்த ஐந்து ஆண்­டு­கா­லத்­துக்கு இவர்­களை நம்பி மக்கள் எவ்­வாறு வாக்­க­ளிக்க முடியும்? இவர்கள் தொடர்ந்தும் தேசிய அர­சாங்கம் எனும் கொள்கை நிலைப்­பாட்டில் உள்­ளனர். ஆனால் இவர்கள் கூறு­வது தேசிய அர­சாங்­க­மா­காது, தேசிய அர­சாங்கம் என்ற பதம் பிரித்­தா­னியா, ஜேர்மன் நாடு­களின் பொரு­ளா­தாரம் வீழ்ச்சி கண்ட நிலையில் அந்த நாடு­களை மீண்டும் கட்­டி­யெ­ழுப்பும் நோக்­கத்தில் முன்னெடுக்கப்பட்டது.

ஆளும் கட்சி ஏனைய அனைத்துக் கட்­சி­க­ளி­னதும் ஒத்­து­ழைப்­புடன் அர­சாங்கம் அமைத்­ததே தேசிய அர­சாங்கம் ஆகும். ஆனால் இங்கு அவ்­வாறு ஒரு அர­சாங்கம் அமை­ய­வில்லை. ஐக்­கிய தேசியக் கட்சி தமக்கு சாத­க­மான ஆட்­சியை அமைத்துக் கொள்ளும் நோக்­கத்தில் தமக்கு வேண்­டப்­பட்ட நபர்­களை வைத்து ஆட்­சியை அமைத்­துள்­ளது. எனவே தொடர்ந்தும் தேசிய அர­சாங்கம் எனும் இவர்­களின் ஆட்­சியை நாம் அனு­ம­திக்க மாட்டோம்.

அத்­தோடு வெகு விரைவில் மீண்டும் ஐக்­கிய மக்கள் சுதந்­தர முன்­ன­ணியின் ஆட்­சியை அமைக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. அதற்கு கடந்­த­வாரம் அனு­ரா­த­புரக் கூட்டம் நல்­ல­தொரு எடுத்­துக்­காட்­டாகும். இப்­போ­தா­வது எமது பலம் என்­ன­வென்­பதை ஐக்­கிய தேசியக் கட்­சியும் அவர்­க­ளது பங்­கா­ளி­களும் உணர்ந்­து­கொள்ள வேண்டும் என்றார்.

முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிடுகையில்,

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியை கண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் மீள் வரு­கையை கண்டும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பயந்து விட்டார். நேருக்கு நேர் நின்று மஹிந்­தவை தேர்­தலில் எதிர்­கொள்ள ரணில் அஞ்­சு­கின்றார். கடந்த இரண்டு பிர­தான தேர்­தலின் போதும் ரணில் அச்­சத்தில் தான் பின்­வாங்­கினார். இம்­முறை நிலை­மையும் அவ்­வாறு தான் அமைந்­துள்­ளது. மஹிந்­தவை நிரா­க­ரித்து தனக்கு சவால் இல்­லாது போட்­டி­யிடும் முயற்­சி­களை அவர் மேற்­கொண்ட போதும் இறுதி நேரத்தில் மஹிந்­தவின் மீள் வருகை ஐக்­கிய தேசியக் கட்­சியை நிலை­கு­லைய வைத்­துள்­ளது. மஹிந்த- மைத்­திரி போட்­டியில் மக்கள் மைத்­தி­ரியை ஆத­ரித்­தது உண்­மையாகும்.

ஆனால் இப்­போது நடப்­பது ரணில் மஹிந்த போட்டியேயாகும். இதில் மக்கள் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கப்போவதில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் உதவியுடன் மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்திருக்கலாம் ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்தது தவறு என்பதை ஜனாதிபதி இப்போதாவது விளங்கிக்கொண்டிருப்பார் எனக் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -