தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து பேசினால், பேசுவோரின் நாக்கை வெட்டுவேன் என்று அ.தி.மு.க. எம்.பி பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.ராசிபுரத்தில் தமிழக அரசின் 4 சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் பேசிய நாமக்கல் தொகுதி எம்.பி. சுந்தரம், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, ஓய்வெடுக்கச் சொல்கின்றனர்.
நாங்கள் யாரையும் ஓய்வு எடுக்க சொல்வதில்லை. நான் எம்.பி. என்பதால், நாவை அடக்கி பேசுகிறேன்.
மேலும், யாராவது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை பற்றி பேசினால் நாக்கை வெட்டுவேன் என்று பேசியுள்ளார்.
