மருந்தை கடலில் வீசியதால் சிறுமி பலி...!

டத்தல்காரர்கள் மருந்தை கடலில் வீசியதால் சிறுமி ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிரியாவில் போர் நடைபெற்று வருவதால் அப்பகுதியை சேர்ந்த இயாஸ் என்பவர் தனது மனைவி மற்றும் 11 வயது மகள் ரக்ஹத் ஹசொவுன் ஆகியோருடன் எகிப்தில் தஞ்சம் அடைந்தார்.

இந்நிலையில் ரக்ஹத் ஹசொவுன் நீரிழிவு நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை ஜேர்மனிக்கு அழைத்து சென்று சிகிச்சை மேற்கொள்ள அவரது தந்தை முடிவு செய்தார்.

இதையடுத்து எகிப்தில் இருந்து கள்ள படகு மூலமாக இத்தாலிக்கு பயணம் செல்ல ஆயத்தமாகினர்.

இந்நிலையில் படகில் ஏறுவதற்கு முன்பாக அவர்களை வைத்திருந்த உடமைகளை கடத்தல்காரர்கள் நீரில் வீச முயன்றனர். தங்களது மகளின் நோயிற்கான மருந்துகள் அதில் இருந்ததால் அதை அனுமதிக்குமாறு அவர்கள் கெஞ்சி கேட்டனர்.

எனினும் அவர்கள் அதை கடலில் வீசினர். இந்நிலையில் 5 நாட்கள் கழித்து ரக்ஹத் கடுமையாக பாதிக்கப்பட்டார்.மருந்துகள் இல்லாததால் பெற்றொர்களின் மடியிலே அவர் இறந்து போனார் என்று கூறப்படுகிறது.

இது குறித்து அவரது பெற்றோர்கள் கூறியதாவது, மருந்துகளை கடலில் போட வேண்டாம் என்று நாங்கள் எவ்வளவு கூறியும் அவர்கள் கடலில் வீசிவிட்டனர்.

எனது மகள் இறந்துபோன கவலை வாழ்நாள் முழுவதும் எங்களை தொடரும் என்று தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -