பாராளுமன்றப் பிரநிதித்துவம் பற்றி ஆராய அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலினால் அவசரக்கூட்டம்



ட்டாளைச்சேனைப்பிரதேசம் சி.ல.மு.காங்கிரசின் அரசியல் போராட்டத்தில் பல அர்ப்பணிப்புகளோடு கடந்த 30வருடங்களுக்கு மேலாக ஒவ்வொரு தேர்தலிலும் 85மூ க்கு மேற்பட்ட வாக்குகளை வழங்கி முனைப்பாக இருந்துவரும் பிரதேசம். ஆயினும் இம்மண்ணுக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்குவதில் ஒவ்வொரு முறையும் நம்பி ஏமாந்து வருகின்ற பிரதேசம். ஆகவே இம்முறை பெரியபள்ளிவாசல் நிர்வாகமும் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனமும் ஒன்றிணைந்து தீர்மானங்களை நிறைவேற்றி இம்மண்ணுக்கான பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொடுக்கவேண்டியது எமது பாரிய கடமையாகும்.

 படித்தவர்கள் நிறைந்துவாழும் இம்மண்ணுக்கு இம்முறையாவது பள்ளிவாசல் முன்னின்று இதனைப் பெற்றுக்கொடுக்காமல் தவற விடுவது நாம் செய்யும் துரோகமும் இறைவனுக்கு முன்னால் பதில்கூறவேண்டிய பொறுப்புமாகும்.

இவ்வாறு அட்டாளைச்சேனைப் பெரியபள்ளிவாசலினால் நோன்புப் பெருநாள் தினமான நேற்று 18-07-2015 பிப.4மணிக்கு கூட்டப்பட்ட நிருவாகசபைääமரைக்காயர்மார்கள்ää உலமாக்கள் கலந்துகொண்ட அவசரமாகக் கலந்துரையாடலில் பெரிய பள்ளிவாசலின் தலைவர் ஜனாப்.ஏ.எல்.எம்.அனீஸ் விரிவுரையாளர் தனது தலைமையுரையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அட்டாளைப்பெரிய பள்ளிவாசல் நிருவாகசபை உறுப்பினரும்முன்னாள் ஜாமிஆநழீமிய்யா சிரேஷ்ட விரிவுரையாளரும் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவிப்பதிவாளருமான அல்ஹாஜ்.எஸ்.எல்.எம்.பழீல் டீயு “ நீண்டகாலமாக அட்டாளைச்சேனைப் பிரதேச மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தேசியப்பட்டியல் நியமனத்தின் மூலம் இம்முறை ஆகஸ்ட்மாத தேர்தலின் பின்பு ‘இன்சா அல்லாஹ்’ நிச்சயம் வழங்கிவைக்கப்படும். இம்முறை இப்பிரச்சினையினை தீர்த்து வைக்கவேண்டுமென எமது பாராளுமன்றக் குழுவும் உச்சபீடமும் தீர்க்கமான முடிவுகளை எடுத்திருக்கின்றன. சி.ல.மு.காங்கிரஸ் அரசியலில் அர்ப்பணிப்புகளுடன் கடந்த 25 வருடங்களாக போராடி வரும் அம்மக்களுக்கு நான் கொடுத்திருக்கின்ற வாக்கினை இன்சாஅல்லாஹ் இம்முறை காப்பாற்றுவேன். 

இம்முடிவை வெகுவிரைவில் அட்டாளைச்சேனையில் வைத்து பகிரங்கமாக அம்மக்களுக்கு அறிவிக்க இருக்கின்றேன் என்று சி.ல.மு.காங்கிரசின் தேசியத்தலைவரும் நகர அபிவிருத்தி நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்கள் சமீபத்தில் கொழும்பில் நடந்துமுடிந்த கட்சியின் தேர்தல் நியமனப்பத்திரம் சம்பந்தமான கலந்துரையாடல்களின் போது எம்மிடம் உறுதியளித்துள்ளாரென சி.ல.மு.காங்கிரஸின் உச்சபீட உறுப்பினரும் கிழக்கு முதலமைச்சரின் இணைப்புச்செயலாளருமான எஸ்.எல்.எம்.பழீல் நிருவாகசபைக்கும் மரைக்காயர் சபையினருக்கும் விளக்கமாக எடுத்துக்கூறினார். 

பின்பு பெரியபள்ளிவாசலினால் சி.ல.மு.காங்கிரஸ் தலைவரை அட்டாளைச்சேனை புத்திஜீவிகளை உள்ளடக்கிய தூதுக்குழ அவசரமாக சி.ல.மு.காங்கிரஸ் தலைவரை உடன்சந்தித்து உறுதிமொழியினைப் பெற்றுக் கொள்ளவேண்டுமென பள்ளிவாசல் நிருவாகம் ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

பின்பு பி.ப.5மணியளவில் நிந்தவூரில் நடைபெற்ற மாவட்டக் குழக்கூட்டதில் இப்பிரச்சினை ஆராயப்பட்டதாகவும் அதன்போது அம்பாரை மாவட்டத்தில் முதலாவது தேசியப்பட்டியலூடான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அட்டாளைச்சேனைக்கே முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுமென மு.கா.தேசியத்தலைவர் மீண்டும் ஆணித்தரமாக பகிரங்க அறிவிப்பை விடுத்தார் என ஜனாப். பழீல் கூறினார். 

இதனையடுத்து பெரிய பள்ளிவாசலின் தலைவர் ஜனாப்.ஏ.எல்.எம்.அனீஸ் விரிவுரையாளருடன் தொடர்பினை ஏற்படுத்திய தலைவர் ஹக்கீம் தான் அவசரமாக கொழும்பு செல்வதாகவும் தனது அடுத்த விஜயத்தின்போது அட்டாளைச்சேனை பெரியபள்ளிவாசலுக்கு வருகை தந்து இந்த உத்தரவாத்தை வழங்கவிருப்பதாகவும் உறுதியளித்திருப்பதாக ஜனாப்.பழீல் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -