எம்.எஸ்.டீன் -
பொது தேர்தலுக்கான நியமனப்பத்திரம் தாக்கல் செய்வது தொடர்பாக கட்சிகளுக்கிடையே காரியங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதான கட்சிகளும்,இனவாதக் கட்சிகளும் வகுப்பு வாதக் கட்சிகளும் தலையை நெருப்புக் கொள்ளியால் சொறிந்து கொண்டிருக்கின்றன. இவ்வேளையில் வாக்காளர்கள் மட்டுமன்றி அவர்களின் காலின் கீழ் மிதிபடும் நாக்கிழுப் புழுவும் படமெடுத்து ஆடிக் கொண்டிருக்கிறது. எல்லாம் நேரம் தான்.!
தேர்தல் வந்துவிட்டால் தெருவால போற வழிப்போக்கனுக்கும்,ஞானம் வந்துவிடும். வந்தது முடிந்தால்; ஆறு கடந்த கதைதான்.எலும்புத் துண்டைப் போட்டால் நக்கிப் பொறுக்கிக் கடிக்கும் நாயும் எஜமானுக்கு வாலாட்டும் நிலைதான் தேர்தல் நிலவரம்.
பிரதான கட்சிகளையும் ஏனைய வகைக் கட்சிகளையும் தள்ளி வைத்து விட்டு நமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலை பற்றியும் அதன் தலைவர் அமைச்சர் ஹக்கீமின் நடவடிக்கைகள் பற்றியும் கொஞ்சம் மூக்கை நுளைத்துப் பார்ப்போம்.
கடந்த பொதுத் தேர்தல் நடந்து முடிந்து நம்முட பாசையில் அஞ்சி வருஷமும் சொச்சமும்.நான் மேலே குறிப்பிட்ட வழிப்போக்கனுகள் எல்லாம் முஸ்லிம்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்று தான்படுவனாக அநுகிக் கொண்டிருக்கிறார்கள்.
முஸ்லிம் சமூகத்துக்கென்ன? ஜாம், ஜாம் என்று நல்லா ஒத்துமையாகத்தானே இருக்காங்க. தொழுகிறாங்க,நோன்பு பிடிக்கிறாங்க, வேறு என்ன ஒத்துமைப்படனும் என்கிற.
ஆங்....ஒங்குட அரசியலுக்காகவா? ஒற்றுமைக்கும் நீங்க பேச முற்படுகின்ற அரசியலுக்கும் என்னய்யா சம்பந்தம்.
என்ன ஒரு கட்சிக்கு வோட்டுப் போட்டு எம்.பிமாரக் கூட்டணுமா?
நம்முட முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய நாளை எடுத்துக்குவம்.எட்டு எம்.பிமார்கள் இருக்கிறார்கள்.இவர்களில் ஓரிருவரைத் தவிர பொது நலன் நோக்கி செயற்பட்டவர்கள் யார் இருக்கிறார்கள்.
கட்சித் தலைவரின் ஷவன் மேன் ஷோ| தனி நபர் அதிகாரத்தின் மூலம் சமூகம் பெற்ற நன்மை தான் என்ன?
பொதுத் தேர்தலில் போட்யிடும் அபேட்சகர்கள் தமத சொத்துப்பத்தையெல்லாம் விற்று கண்ட நிண்ட மனிதர்களிடமெல்லாம் ஸலாம் போட்டு இறுதியில் வெற்றி பெற்று வந்தால் தேர்தல் மூலம் கிடைத்த மொத்த எம்.பிக்களைக் காட்டி சகல சலுகைகளையும் பேரம் பேசி அமைச்சர் பதவி உட்பட தன் பைக்குள் போடும் ஹக்கீமின் நிலைப்பாட்டால் மற்றுமொரு தேர்தலுக்கு மக்களிடம் முகம் கொடுக் முடியாத பாவிகளாக,கையாலாகாதவர்களாக எம்.பிக்கள் மனம் வெந்து அல்லல்படும் அவஸ்தையை ஹக்கீம் அறிவாரா?
தொகுதி மக்களால் தெரிவு செய்யப்பட்ட எம்.பிக்களுக்கும் தன்னுடைய தொகுதிக்கும்,மக்களுக்கும் கடுகளவான சேவையைக் கூட செய்ய முடியாத நிலையைத் தோற்றுவித்து சூழ்நிலைக் கைதியாக வைத்துவிட்டு மீண்டும் தேர்தலுக்குப் போ என்று பழையவர்களிடம் அல்லது புதியவர்களிடம் கூறினால் என்ன நியாயம்.
தேர்தல் களத்தில் மர்ஹூம் அஷ்ரஃபின் பாடல்கள் மூலமும்,நான் எனும் நீ என்ற கவிதை மூலமும் அப்பாவி மக்களின் வாக்கை சூறையாடிவிட்டு கொழும்பில் போய் தங்கி விடும் ஹக்கீமினால் முஸ்லிம் சமூகம் பெற்ற நன்மைதான் என்ன?
பழைய குருடி கதவைத்திறடி என்ற கதை போல காலத்துக்குக் காலம் கதை சொல்ல வரும் ஹக்கீமை முஸ்லிம் சமூகம் இன்னும் ஏற்கத்தான் வேண்டுமா?அல்லது முஸ்லிம் காங்கிரஸிலிருந்து துடைத்தெறிய வேண்டுமா என்பதை சமூகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தாம் தெரிவு செய்து அனுப்பும் எம்.பிக்களை நம்பாத ஹக்கீமை மக்கள் இனிமேலும் நம்பத்தான் வேண்டுமா? தன்னோடு இருப்பவர்களையே அம்போ என்று விட்டுவிடும் ஹக்கீமினால் முஸ்லிம் சமூகத்தை ஒரு குடையின் கொண்டு வர முடியுமா?
தமிழ் தேசியக் கூட்டமைப்பை எடுத்துக் கொண்டால் அதில் உள்ள கட்சிகளில் சில கடந்த காலத்தில் ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டவை.அப்படி இருந்தும் அக்கட்சிகளுக்கிடையே உட்கட்சி ஜனநாயகம் மேலோங்கிக் காணப்படுகின்றது.
சம்பந்தனுக்கு ஒரு மதிப்பு,மாவை என்றால் ஒரு மஹிமை,சுரேஷ் என்றால் ஒரு சிறப்பு,சுமந்திரன் என்றால் பலம் என அக்கட்சியிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் அரசியல் சமூகத்தில் மதிப்பும் மரியாதையுமுண்டு. ஆனால் முஸ்லிம் காங்கிரஸிலிருக்கும் எம்பிமார்களுக்கு இப்படியொரு மதிப்பு மரியாதையை ஹக்கீம் வழங்கி இருந்தால் முஸ்லிம் சமூகம் வானத்தைத் தொட்டிருக்கும்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி ஜனநாயக மரபு என்பது என்னவென்றே தெரியாமல் உள்ளது. அதுதான் ஹக்கீமின் தனிமனித யாத்திரை.
தனது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்காத ஹக்கீமின் நடவடிக்கைகளை அவதானித்த அவரது அமைச்சிலுள்ள லக்டோஜன் பாப்பாக்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தலைவருக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தினால்தான் தொழில் வாய்ப்புக்களைக் கூட அவரே கையாள்கின்றார் என்று கூறியுள்ளார்கள்.
அவரது நடவடிக்கையினால் கட்சிக்குப் பாடுபட்டவர்கள் யார் என்பதை அடையாளம் காண முடியாத பக்கிரி,வழிப்போக்கன், தெரு நாய்களுக்கெல்லாம் தொழில் கொடுத்துள்ளாராம்.
மட்டுமன்றி கட்சி மட்ட நடவடிக்கைகள் கூட ஹக்கீமின் கட்டுப்பாட்டில்தான் நடக்கின்றதாம்.உதாரணமாக ஹனிபா மௌலவி என்ற முன்வரிசை போராளி (சிரிக்க வேண்டாம்) மாநகர சபைத் தேர்தலில் எடுத்த வாக்கு 1432(500ழூ3) ஐந்நூறு பேர் வாக்களித்திருந்தாலும் 1500 வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும்.இவரைக் கட்சி நடவடிக்கைகளுக்கு அனுப்பும் அளவுக்கு ஹக்கீமின் வங்குரோத்து நிலை.
கட்;சி தொடர்பான மறுப்பறிக்கை ஒன்றை விடுமாறு ஹக்;கீம் கூறியதையடுத்து அடுத்த நாள் தனக்குத் தானே ஸ்ரீலங்கா மஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பணிப்பாளர் என்று நாமம் சூட்டிக் கொண்டவர்.எம்பிமார்களைக் கூட பின்னால் தள்ளிவிட்டு முன் கதிரையைப் பிடிக்கப் போட்டி போடும் சங்கீத கதிரை போராளி.
தனது அமைச்சில் மடுத்தோண்டும் வேலைக்குக்கூட தினக்கூலி போட்ட சரித்திர நாயகன் ஹக்கீம் மீண்டும் தேர்தலுக்கு வருகின்றார் .அநேகமாக யானையில்தான்.
மரத்திலிருப்பவர்கள் யானைக்கு வாக்குப் போட வேண்டும்.ஏன் யானையிலிருக்கும் மற்ற சோனகனுக்கு வாக்குப் போட்டால் ஹறாமா?ஹக்கீம் காலத்துக்குக் காலம் பச்சோந்தி வேஷம் போட்டு மக்களைக் குழப்பி தன் சுயநலத்துக்கு வழி பண்ணுகிறார்.கிழக்கு மாகாணத்தான் இன்னும் மடையனாக இருக்கப் போகின்றானா என்பது தான் நம்முள் உள்ள கேள்வி.
ஹக்கீம் இறுதியாக மைத்திரியுடனும் முரண்பட்டுள்ளார்.தேர்தலுக்குப் பின் முஸ்லிம் சமூகத்தின் நிலைமை மோசமாவதை விட இப்போது முஸ்லிம்கள் விழிப்பா இருக்க முயற்சிக்க வேண்டும்.
