மக்கள் காங்கிரஸ் எட்டு ஆசனங்களைப் பெற்று பேரம்பேசும் சக்தியாக விளங்கும் - றிஷாத் பதியுதீன்

ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-

திர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எட்டு ஆசனங்களைப் பெற்று பேரம்பேசும் சக்தியாக விளங்குமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் வவுனியாவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை கையளித்தபின் பெருந்திரளான ஆதவாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏழு மாவட்டங்களில் இம்முறை போட்டியிடுகின்றது. இந்த தேர்தலில் அதிகப்படியான உறுப்பினர்களை பெற்று ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக ஆக்குவதற்கான சக்தியாக திகழும் என அவர் தெரிவித்தார்.

என்னையும் எனது கட்சியையும் தோற்கடிப்பதற்காக அரசியலிலிருந்து ஓரம்கட்டுவதற்காக நான் புதிதாக ஏற்படுத்திக் கொடுத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்னும் இரண்டு கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றார்.

இந்தத் தேர்தலில் எனது மக்கள் இந்த சதிகாரர்களுக்கு தகுந்த பாடம் புகட்டவுள்ளார்கள். அவர்களை இருந்த இடம் தெரியாது அனுப்புவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அகதி மக்களால் தெரிவு செய்யப்பட்ட நான் அந்த மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களை நன்கு அறிவேன். நானும் அகதி முகாமிலிருந்து வந்தவன்.

இந்த மக்களின் துயரங்களை துடைப்பதற்காக அரசியலில் ஈடுபட்டு அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்டவன். எனவே அந்த மக்களை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன்.

புடித்துவிட்டு வேலையற்றிருக்கும் யுவதிகளுக்கு அவர்களின் பொருளாதார முன்னேற்றம் கருதி தையல் இயந்திரங்களை கொடுக்கும்போது அதனை அரசியல் இலாபத்திற்காக நான் செய்வதாகக் கூறி என்னை காட்டிக் கொடுக்கின்றார். இதனால் பாதிக்கப்படுவது அந்த யுவதிகள் தான் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

இதற்கு பின்னால் ஒரு சில ஊடகங்களும் இனவாதிகளும் மதவாதிகளும் இருக்கின்றனர். இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரையில் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

எதிர்காலத்தில் புதிய தேர்தல் முறையை கொண்டு வருவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றது. இதன் மூலம் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க இருக்கின்றார்கள். இன்று இருக்கின்ற பிரதிநிதித்துவத்தினால்தான் நான் உங்கள் மத்தியில் பாராளுமன்ற உறுப்பினராகி அமைச்சரானே;. இந்த புதிய தேர்தல் முறை வந்தால் சிறபான்மையினர் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்து அனாதைகளாகிவிடப்படுவார்கள்.

எனவே இது ஒரு தேர்தலே அல்ல எதிர்வரும் ஐந்து வருடம் நாம் இங்கே இருக்கப்போகின்றோமா அல்லது வெளியேற்றப்படப்போகின்றோமா என்பதை சொல்லுகின்ற ஒரு தேர்தலாகவே நான் பார்க்கின்றேன்.

இன்று அபாண்டமான கதைகளை சொல்லி வருகின்றார்கள். எனக்கு 600 ஏக்கரில் வாழைத்தோட்டம் இருப்பதாக. ஆப்கபடி இருக்குமென்றால் அதை நான் மண்ணுக்குள்ளா புதைத்து வைத்துள்ளேன். எனவே இதெல்லாம் என்னை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் ஒரு செயலாகும்.

ஏதிர்வரும் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இரண்டு தேசியல் பட்டியல் உள்ளடங்களாக பத்து ஆசனங்களை பெற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக ஆக்கும் சக்தியாக விளங்கும். எனவே எதிர்வரும் தேர்தலில் மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -