அபூ-இன்ஷhப்
புனித நோன்பினுடைய புனிதத்துவத்தை மாற்று மதங்களைச் சேர்ந்தவர்கள் அறிந்து கொள்ளக்கூடிய வாய்பினை இந்த இப்தார் நிகழ்வுகள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன என அம்பாறை மாவட்ட செயலாளர் துசித பீ வனிகசிங்க தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட செயலக முஸ்லீம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்த 22வது சகோதரத்துவ இப்தார் விஷேட நிகழ்வு நேற்று (13) மாலை அம்பாறை மாவட்ட செயலக முன்றலில் மிக பிரமாண்டமான முறையில் முஸ்லீம் மஜ்லிஸின் தலைவரும் மாவட்ட செயலக பிரதம பொறியியலாளருமான ஐ.எல்.எம்.றாசீக் தலைமையில் நடைபெற்றது
இவ்வைபவத்தில் பிரதம அதீதியாக கலந்து கொண்ட உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
சகலருடைய சமூகங்களினதும் மதகலாசார விடயங்கள் மதிக்கப்பட வேண்டும் பலதரப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் கடமையாற்றுகின்ற இப்பேர்பட்ட நிறுவனங்களில் இவ்வாறான வைபவங்கள் மாற்று மத சகோதரர்களுடைய சமய கலாசார விழுமியங்கள் தொடர்பாக அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பபை ஏற்படுத்தும்; என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
முஸ்லீம்கள் இந்த ரமழான் காலங்களில் ஒருமாதகாலங்களுக்கு உபவாசம் என்ற நோன்பை நோக்கின்றனர் நோன்பு என்பது இங்கு உரையாற்றிய மௌலவி அவர்கள் தெளிவாக கூறியது போன்று நோன்பு காலத்தில் வெறுமனே பசித்திருப்பதும் தாகித்து இருப்பது மாத்திரமன்றி மற்றவர்களுடைய பசியை, தாகத்தை, கஷ்டத்தை அறிந்து கொள்வதற்கான ஒரு முன்மாதிரி பயிற்சிக் களமாக அமைகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டது போன்று நோன்பு நோன்கின்ற ஒருமனிதன் தன்னுடைய சகல உணர்வுகளையும் கட்டுப்படுத்தி அவன் செய்கின்ற சகல விடயங்களிலும் நேர்மையுடனும், பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றன.
தாம் செய்கின்ற தனிப்பட்ட காரியங்கள் தொடக்கம் சமூகம் சார்ந்த தொழில் சார்ந்த சகல காரியங்களிலும் முன்மாதிரியாக பொறுப்புணர்வு மிக்கவர்களாக திகழ வேண்டும் என என்னுடைய ரமழான சிந்தனையாக கூறி மாவட்ட செயலகத்திலே நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வு சிறப்பாக நடைபெற உழைத்த முஸ்லீம் மஜ்லிஸ் அமைப்பின் தலைவரும் பிரதம பொறியியலாளருமான ஐ.எல்.எம்.றாசீக் உட்பட அனைவருக்கும் விஷேடமாக இங்கு வருகை தந்த மதகுருமார்களுக்கும், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.
இந்த நிகழ்வில் அதீதிகளாக மேலதீக அரச அதிபர்களான கே.விமலநாதன், எம்.ஐ.அமீர் நளீமி, பிரதம கணக்காளர் ஐ.எம்.ஹூசைன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் லத்தீப், மாவட்ட கணக்காய்வு அத்தியட்சகர் கணகரத்தினம் உட்பட மாவட்ட செயலகத்தின் பிரிவு மட்ட பிரதிப்பணிப்பாளர்கள், உதவிப்பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள் என 500 மேற்பட்டோர் கலந்த கொண்டனர்.
விஷேடமாக ரமழான் மாத சிறப்புச் செற்பொழிவினை காலிமாவட்ட ஜம்யியதுல் உலமா சபையின் பிரதி தலைவரும் செய்யத் பின் தாபீத் மக்தப் அரபுக்கல்லூரியின் பணிப்பாளருமான மௌலவி லுத்பி பின் அபதுல் ஹபீல் அவர்களினால் சிங்கள மொழி மூலம் நிகழ்த்தப்பட்டன.







