அரசியலுக்கு அப்பால் கிழக்கு சமூகம் எதிர் நோக்கும் பாரிய பிரச்சினை என்ன தெரியுமா?

அன்பார்ந்த அம்பாறை மாவட்ட வாக்காளப் பெருமக்களே 

அரசியலுக்கு அப்பால் கிழக்கு சமூகத்தை எதிர் நோக்கும் பாரிய பிரச்சினை என்ன தெரியுமா ? 

நாம் தேர்தல் களத்தில் பாரிய அரசியல் கட்சிகளையும் அதனில் இணைந்துள்ள பண பல ம் படைத்த அரசியல் வாதிகளுடனும் எதிர் நீச்சல் ஒன்றை ஒட்டகச் சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் அச்சமின்றி எதிர் கொள்கிறோம் ஏன் என்றால் உங்கள் எதிர் காலச் சந்ததினரின் துயர் போக்கவே.எமது கட்சியிடம் இத் திட்டத்தை செய்து முடிக்கும் திறன் இருந்தும் அதைப் பாராமல் புறம் தள்ளுவது எனது மனச் சாட்சிக்கு ஒரு உறுத்தலாகவே உள்ளது 


தற்போது கிழக்கில் வீடுகள் கட்டுவதற்கான நில இடவசதிகளும் , அதன் விலை வாசிகளும், வீடுகளின் விலைகளும் ரொகெட் வேகத்தில் அதிகரித்த வண்ணமாக உள்ளது. இது கிழக்கு சமுதாயம் எதிர் காலத்தில் எதிர் நோக்கும் பாரிய பிரச்சினை ஆகும். 

இதன் எதிர் ஒலியாக எங்களது கிழக்கு சமுதாயத்திடம் கறை படிந்த சீதனப் பிசாசி என்னும் நோய்னால் மிகவும் பாதிக்கப் பட்டு. எத்தனையோ ஏழைப் பெற்றோர்களின் வயது கடந்த பெண் பிள்ளைகள் ஏக்கப் பெருமூச்சுடன் புகைந்து கொண்டிருகிறார்கள் என்பதை நம்மில் பலர் கண் இருந்தும் குருடர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதனை நிவர்த்தி செய்யும் முகமாக பல மாடிக் கட்டிட மனைகளை அமைத்து குறைவான விலையில் அல்லது தவணை கட்டன முறையில் கொடுக்க எங்களது தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி மலேசிய முதலீட்டார்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளது .இதனால் வயது கடந்த ஏழைக் குமரிகளின் வாழ்வுக்கு ஒரு விடிவு காலம் பிறக்க வழி ஏற்படும் .

இவ் வாறான திட்டங்களை நமது அரசியல் வாதிகள் முன் எடுத்து செய்வார் கள் எனின் நம் சமுகம் எவ்வாறு செழிக்கும் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை , ஆனால் நாம் உறுதியாக் கூறுகிறோம் மூன்று வருடம்களுக்குள் நாம் இத் திட்டத்தை செய்து முடிப்போம் ,இல்லாவிடின் நாம் அரசியலில் இருந்து ஒதுங்குவோம் என்பதை இங்கு நான் கூறிக் கொள்ள விருபுகின்றேன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -