இக்றம் சல்மான்-
இன்று நிந்தவூரைச் சேர்ந்த பல கழகங்கள், சங்கங்கள், இளைஞர் அமைப்புக்கள் போன்றன இணைந்து ஒன்றுகூடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன.
அவை அனைத்தும் ஒருமித்த குரலில் ஒற்றுமையாக பின்வரும் துண்டுப் பிரசுரத்தை மக்கள் விழிப்புணர்வுக்காக வெளியிடத் தீர்மானித்தன.
அதில், எதிர்வரும் தேர்தலில் நிந்தவூர் சார்பாக களமிறங்கும் வேட்பாளர் கொண்டிருக்க வேண்டிய பண்புகள் பற்றிய கண்ணோட்டத்துடன் அதற்காக தாம் சட்டத்தரணியும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஆரிப் சம்சுடீனை இனம் காண்பதாகவும் ஒருமித்த குரலில் தெரிவித்தன.


