அலரி மாளிகையில் வெவ்வேறாக இரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டன..!

அஸ்ரப் ஏ சமத்-

ன்று காலை 11.00 மணிக்கு அலரி மாளிகையில் வெவ்வேறாக இரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டன. முதலாவது சிகல உருமைய கட்சித் தேரா் அத்துரலியத் தேரா் பாட்டலி - ரணில் விக்கிரமசிங்கவுக்கும்

ஸ்ரீ.ல.சு.கட்சியில் இருந்து வந்த அமைச்சா் ராஜித்த, அர்ஜன ரணதுங்க, எம்.ரி.எஸ் குணவா்த்தன, பிரதியமைச்சா் ஏல் குணசேகர, ஹிருணிக்கா, ஆகியோா்கள் கொண்ட குழுவுக்கு தலைமைதாங்கி ராஜித்த, ரணில் விக்கிரமிசிங்கவுக்குமிடையிலான ஓப்பந்தம் கைச்சாதிடப்பட்டது.

13 பேர் ஜக்கிய மக்கள் முன்னணியில் வருவதாகச் சொல்லி நேற்று ராஜித்த சொல்லியிருந்தாா் ஆனால் 7 பேர் இன்று வருகைதந்திருந்தனா். இவ் 7 பேரும் ஜ.தே.கட்சியில் கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் போட்டியிடுகின்றனா். வேட்பு மனுவிலும் கைச்சாத்திட்டனா். (அததுரலியத தேரோ, பாட்டலி சம்பிக்க ராஜித்த சோனாரத்தின, ஏல் குணசோகர, எம்.ரீ.எஸ் குணவா்ததன, ஹிருனிக்கா ) இதில் சாட்சிகளாகவே ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தலைவா் ரவுப் ஹக்கீம், மனோ கனேசனும் கையெழுத்திட்டனா்.

ரணில் இங்கு உரையாற்றுகையில் இவ்வாறானதொரு கட்சிகள் எல்லாம் சோ்ந்து தான் ஜனவரி 8 ஆம் திகதி இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவைக் கொண்டுவந்தோம்.

அதே போன்று ஆகஸ்ட் 16ஆம் திகதியும் இதுபோன்றதொரு நல்லட்சியை பாராளுமன்த்திலும் ஏற்படுத்துவோம் மீண்டும் ராஜபக்ச கல்வா்கள் ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றனா். அவா்ககளை தோற்கடித்து இந்த கல்வா்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என கூறினாா். ராஜித்த, சம்பிக்க ரணவக்க, ரவுப் ஹக்கீம் , மனோ கனேசன் ஆகியோறும் இங்கு உரையாற்றினாா்கள்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -