யார் என்ன சொன்னாலும் தேசிய அரசாங்கமே அமையும் -உலமா கட்சி

எஸ்.அஷ்ரப்கான்-

யார் என்ன சொன்னாலும் எவ்வளவு விடாப்பிடியாக அரசியல் காய் நகர்த்தல்களில் ஈடுபட்டாலும் அடுத்த பாராளுமன்றம் பெரும்பாலும் தேசிய அரசாங்கமாகவே அமையும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

நடைபெறப்போகும் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு சம்பந்தமாக ஆதரவாளர் மத்தியில் பேசும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேசிய அரசாங்கம் என்றால் யானை, வெற்றிலை என அனைத்தையும் கொண்ட அரசாங்கமாகவே அமையும். இதுவே ஜனாதிபதி மைத்திரியின் குறிக்கோள் என்றும் தெரிகிறது. மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ஆனாலும் ரணில் அமைச்சராவார். ரணில் பிரதமர் ஆனாலும் மஹிந்த அல்லது மஹிந்த அணியினர் அமைச்சர்களாவர். இந்த யதார்த்தத்தை முஸ்லிம் சமூகம் புரிந்து கொளள்ள வேண்டும். இது தான் இன்றைய கள நிலவரம்.

எமது கட்சியை பொறுத்தவரை ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான சுதந்திர முன்னணிக்கு தேசிய ரீதியில் ஆதரவு வழங்க முடிவெடுத்துள்ளோம். பிராந்திய ரீதியில் இன்னமும் நாம் சில முடிவுகளை எட்ட வேண்டியுள்ளது.

நாங்கள் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. அவர் எல்லோரையும் போல் ஒரு பாராளுமன்ற வேட்பாளர். ஆவர் அதில் வெற்றி பெறுவார் என்பது அனைவரும் அறி;ந்த விடயம். அவர் அணி வென்றாலும் அவர் பிரதமராவது கடினமாகவே இருக்கும். ஆனால் நாம் மைத்திரி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பலப்படுத்த வேண்டும். அதனூடாக அமையப்போகும் தேசிய அரசில் நமது சமூகத்துக்கான பலன்களை எவ்வாறு பெற முடியும் என்றே சிந்திக்க வேண்டும். மாறாக முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் என்கிற ஏமாற்று மோசடி கட்சிகளுக்கு வாக்களிப்பது நமது தலையில் நாமே மண் அள்ளிப்போடும் கதையாகவே முடியும்.

சமூகம் விரும்பினால் யானைக்கட்சியில் நேரடியாக கேட்போருக்கு அவர்கள் சிங்களவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு வாக்களிக்கலாம். ஜனாதிபதி தேர்தலின் போது நமது சமூகம் அம்பாரை தயாவை கல்முனைக்கு அழைத்து வந்து மாலையிட்டு வரவேற்கவில்லையா? இடையில் ஏன் நமக்கு முஸ்லிம் புறோக்கர் கட்சிகள். இந்த திருட்டு புறோக்கர்களால் நமது சமூகம் துன்பப்பட்டதே தவிர இன்பம் அனுபவித்ததில்லை.

ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் அரசியல் விழிப்பை ஏற்படுத்துவதும் மக்களுக்கு உண்மை நிலையை சொல்வதும் எமது கடமையாகும். ஆகவே அமையப்போகும் தேசிய அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகம் பங்காளியாக வேண்டுமென்றால் ஒரு பக்கம் மட்டும் நமது வாக்குகளை குவிக்காது இரு பக்கமும் நமது ஆதரவை வழங்க வேண்டும். இல்லாவிடில் நமது சமூகத்துக்கெரிரான இனவாதம் அதிகரிக்க நாமே காரணகர்த்தாக்களாகிய நிலை ஏற்படும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -