இ.தொ.கா இம்முறை ஐ.ம.சு கூட்டமைப்பில் நுவரெலியாவில் போட்டியிடவுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்குதலுக்காண விண்ணப்பத்தில் கையெழுத்திடும் நிகழ்வு கொழும்பு மஹாவெலி கேந்திர நிலையத்தில் ஐ.ம.சு கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமசந்திர முன்னிலையில் நேற்று (11) நடை பெற்றது.
அதன் படி இ.தொ.கா வின் தலைவர் முத்து சிவலிங்கம், பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், உப தலைவி அனுஷா சிவராஜய ஆகியோர் போட்டியிவுள்ளனர். இந் நிகழ்வில் சி.பி.ரத்னாயக்க, மத்திய மாகான அமைச்சர் எம்.ரமேஸ், ஊவா மாகான சபை உருப்பினர் செந்தில் தொண்டமான், ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் ஆறுமுகன் தொண்டமான் உட்பட இ.தொ.கா வின் முக்கிய உருப்பினர்கள் கலந்துக் கொண்டார்கள்.