அமான்-
அமைச்சர் ரிசாதால் உருவாக்கப்பட்ட வன்னி மாவட்ட முன்னாள் எம்.பி ஹூனைஸ் பாறுக் தற்போது எந்தக் கட்சியில் இருக்கிறோம், இருக்கப்போகுறோம் என்று தெரியாமல் அலைந்து திரியும் அவல நிலக்கு தற்போது உள்ளாகியுள்ளார்
இதனால் தனது எதிரியான ரிசாத் பதியுதீன் - நான் தோற்றாலும் பரவாயில்லை அவர் வெற்றியடைந்துவிடக்கூடாது என்ற மன உளைச்சலுக்கு உள்ளாகி மன அழுத்தத்தின் விழிம்புக்கே சென்றுள்ளார்.
முஸ்லிம்களுக்கு பெரும் அநீதி இழைத்த, முஸ்லிம்களால் துரத்தியடிக்கப்பட்ட மகிந்தவின் அணியிலாவது போட்டியிட்டாவது ரிசாத் பதியுதீனை வன்னியிலிருந்து துரத்த வேண்டும், தோற்கடிக்க வேண்டும் வன்னியிலிருந்து மூன்று முஸ்லிம் பிரதிநிததுவம் வருவதற்கு இடமளிக்கக் கூடாது என்ற ஒரு பாரிய துரோகச் செயலை செய்யும் அளவுக்கு இன்று அவருக்கு மன அழுத்தம் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த நோக்கத்தின் அடிப்படையில் இந்த நிமிடம் வரை இதுவரை 05 கட்சிகளின் காரியாலயங்களுக்கு ஆசனம் கேட்டு அலைந்திருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
வன்னி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் என்ற பதவி நிலையின் அடிப்படையில் சிறிகொத்தாவுக்குச் சென்று ஐ.தே.க முன்னணி தலைவர்களை சந்தித்துள்ளார்.
அங்கு அவர் - ரிசாதுக்கு போட்டியிட இடமளிக்கக் கூடாது என வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த முன்னணி தலைவர்கள் இதற்கு மறுப்புத் தெரிவித்ததுடன் இது தொடர்பில் கட்சித் தலைமைதான் இறுதி முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளனர்.
அதன் பின் அப்படியென்றால் ரிசாத் மட்டும் போட்டியிட அனுமதியுங்கள் இரண்டு அல்லது மூன்று ஆசனங்களை அவர் சார்ந்த அ.இ.ம.கா கட்சியனர்க்கு வழங்க வேண்டாம். அவ்வாறு நீங்கள் வழங்கினால் அந்த ஆசனங்களுக்குரியவர்களும் வெற்றியடைந்துவிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனக்கு ஆசனம் தராவிட்டாலும் பரவாயில்லை அவருக்கு 02 அல்லது 03 ஆசனங்கள் கொடுக்க வேண்டாம் என மன்றாடியுள்ளார். இதனையடுத்து அவர்களின் பேச்சு முடிவுக்கு வந்துள்ளது.
இதனைத் தொடர்;ந்து ஐதேகவுடனான பேச்சு தனக்கு சாதகமாக இல்லை என்பதை அறிந்த ஹூனைஸ் ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன தலைமையிலான சுதந்திரக்கட்சியில் போட்டியிட அனுமதி கோரியுள்ளார். இங்கும் அவருக்கு பார்ப்போம் என உறுதிமொழி மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இதிலும் நம்பிக்கை கொள்ளாத ஹூனைஸ் முஸ்லிம்களுக்கு அநீதியும் அட்டூழியமும் புரிந்த மகிந்த ராஜபக்ச அணியினரை சந்தித்து போட்டியிட ஆசனம் கேட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் அணியில் மிக முக்கிய பிரமுகரான முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமையை சந்தித்த ஹூனைஸ் 'மகிந்த தனிக் கட்சியாக தேர்தலில் குதித்தால் அந்த அணியில் வன்னி மாவட்டம் சார்பாக போட்டியிட ஆசனம் வழங்குமாறு கேட்டுள்ளார்.
இதன் போது ஹூனைஸை நோக்கிய மகிந்தானந்த அளுத்கமகே வன்னி முஸ்லிம்கள் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவார்களா என வினவியுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஹூனைஸ் 'வில்பத்து விடயத்தை வைத்து பிரச்சாரம் செய்தால் முஸ்லிம்களை எமக்கு வாக்களிக்க தூண்டலாம். அத்தோடு பிரதேசவாதத்தையும் தமிழ் மக்களிடம் இனவாதத்தையும் தூண்டினால் மகிந்தவுக்கு ஆதரவை திரட்டும் அதேநேரம் ரிசாதையும் தோற்கடிக்கலாம் என சுட்டிக் காட்டியுள்ளார்.
ஏற்கனவே மகிந்தவின் அரசு கவிழ்வதற்கு ரிசாதும் காரணம் என ஆத்திரத்துடன் இருக்கும் மகிந்த தரப்பினர் இதுதான் தக்க தருணம் ரிசாதை வஞ்சம் தீர்க்க என்ற நிலைப்பாட்டில், ஆசனம் வழங்குவதாக முதற்கட்டமாக இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
இவ்வாறு இருக்கத்தக்க நிலையில் முகா தலைவர் ரவூப் ஹக்கீமையும் ஒரு சந்தர்ப்பத்தில் ஹூனைஸ் பாறுக்கு சந்தித்து உரையாடியுள்ள தகவலும் கிடைக்கப்பெற்றுள்ளது.
வன்னி மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனியாக போட்டியிட்டால் நானும் உங்கள் கட்சியுடன் இணைந்து போட்டியிட தயாராக உள்ளேன் என ஹக்கீமிடம் உள்ளார்ந்த ரீதயாக தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஹக்கீம் 'ஏற்கனவே வன்னியில் எம்பி ஒருவர் இருக்கின்றார். அவருடன் கலந்துரையாடிவிட்டு பதில் தருகிறேன் என கூறி வழியனுப்பி வைத்துள்ளார்.
இவ்வாறெல்லாம் பிரபல்யமிக்க கட்சிப் பிரமுகர்களை சந்தித்து படியேறிய ஹூனைஸ் தனது மன அழுத்தத்தின் உச்சக் கட்டமாக தான் என்ன செய்கின்றேன் என்பதை அறியாதவராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த எம்.ஐ.எம் முகிதீன் என்பவரின் தலைமையிலான தமிழ் -முஸ்லிம் கூட்டமைப்பை சந்தித்து ' (பதிவு செய்யப்படாத) இந்தக் கட்சித் தலைமைப்பொறுப்பை தனக்கு தருமாறும் அந்த கட்சியின் ஊடாக மகிந்த அணியுடன் இணைந்து வன்னியில் போட்டியிட முடியும் என குறிப்பிட்டு தான் வெற்றி பெற்று நல்ல நிலையை அடையும் போது உங்களது கட்சியை கவனித்துக் கொள்வதாகவும் அவர்களிடம் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார்.
இந்தக் கட்சியின் தலைமையை எனக்கு தருவீர்கள் என்றால் ஹக்கீம் ரிசாதைப் போன்று ஒரு கட்சித் தலைவராகவும் கெபினட் அமைச்சராகவும் வரமுடியும் என்றும் மேலும் ஆசைவார்த்தைகளை கூறியுள்ளார்.
இவ்வாறு தான் வெற்றி பெறாவிட்டாலும் பறவாயில்லை அல்லது அரசியலிருந்து ஒதுங்கினாலும் பரவாயில்லை. ரிசாதோ , அ.இ.ம.கா சார்பானவர்களோ வன்னியில் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதில் ஹூனைஸ் மிகவும் உறுதியாக இருப்பதுடன் இதனைச் சிந்தித்து சிந்தித்து மன அழுத்தத்திற்கும் உள்ளாகியிமுள்ளார்.
இவ்வாறான ஒரு கட்டத்தில் தான் வன்னி மாவட்ட முஸ்லிம்கள் ஒற்றுமைப் படவேண்டியதன் அவசியம் உணரப்படுகின்றது. முன்னாள் எம்பி ஹூனைஸ் பாறுக் இவ்வாறு அலைந்து திரிகின்றார் என்றால் - இவரின் பின்னால் மிகப்பெரும் ஊடக நிறுவனமும் அந்த நிறுவனத்தின் இவர்கள் சார்ந்த இனவாத எம்பியும் புலம்பெயர் தமிழர்களும் இருப்பார்கள் என்பதில் ஒரு துளியளவில் சந்தேகம் இல்லை என்ற உண்மையையும் வன்னி மாவட்ட முஸ்லிம்கள் உணர வேண்டிய தருணம் இது.
