பாராளுமன்றம் கலைப்பதற்கு ஒரு நாளைக்கு முன்னர் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் புல்மோட்டை இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்துக்கு சட்டவிரோதமான முறையில் நியமனம் வழங்குவதற்கு அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் நடவடிக்கை எடுத்து வருவதாக அக்கூட்டுத்தாபனத்தின் சுதந்திர ஊழியர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நியமனங்களை வழங்க அமைச்சரின் உத்தரவின் பேரில் கூட்டுத்தாபன அதிகாரிகள் செயற்பட்டு வருவதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நியமனம் தொடர்பில் ஊழியர் சங்கங்கள் மூன்று இணைந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்ததனால் நியமனங்களைக் குறைத்துள்ளதாகவும் அச்சங்கம் கூறியுள்ளது TH
