இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் இரு பிரதான கூட்டணிகளும் தமது தேசியப் பட்டியலுக்கான வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளனர்.இந்தப் பட்டியலில் “கருணா” என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் பெயர் இல்லை.
கடந்த நாடாளுமன்றத்தில் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமனம் பெற்று அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஃபௌசி, பேராசிரியர் பீரீஸ், திஸ்ஸ அத்தநாயக்க உட்பட பலரது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
