மருத்துவ நுழைவுத்தேர்வில் ஹிஜாபுடன் பங்கு கொள்வோம் : முஸ்லிம் மாணவிகள் சூளுரை

'இஸ்லாத்துக்காக எதையும் இழப்போம் ; எதற்காகவும் இஸ்லாத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்' 

'All India Pre-Medical Test' (AIPMT) சார்பில் ஜூலை 25-ல் நடைபெறவுள்ள மருத்துவ நுழைவுத்தேர்வில், தலையில் முக்காடு அணிந்தோ, முழுக்கை சட்டை அணிந்தோ வரக்கொடாது என்ற உத்தரவை எதிர்த்து முழுமையான ஹிஜாபுடன் தேர்வில் பங்கு கொள்வோம் என முஸ்லிம் மாணவிகள் சூளுரைத்து உள்ளனர்.

இதுகுறித்து பீகாரை சேர்ந்த மாணவி பாத்திமா கூறுகையில் :

10-ம் வகுப்பில் 90.4% மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் 92.6% மதிப்பெண்களும் பெற்றுள்ள நான், ஜூலை 25-ல் நடக்கவுள்ள மருத்துவ நுழைவுத்தேர்வில் கண்டிப்பாக பங்கு கொள்வேன்.

தலையில் முக்காடு, முழுக்கை சட்டை உள்ளிட்ட இஸ்லாமிய ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், நான் முழுமையான ஹிஜாப் உடையுடன் தேர்வில் பங்கு கொள்வேன்.

எத்தகைய பிரச்சினையையும் சமாளிக்கும் திடமான ஆற்றலுடன் முஸ்லிம் மாணவிகளாகிய நாங்கள் அத்தேர்வில் பங்கு கொள்வோம்.

டாக்டராவது தான் எனது லட்சியம் என்றாலும், இஸ்லாத்துக்காக எத்தகைய தியாகத்தையும் மேற்கொள்வோம்; எதற்காகவும் இஸ்லாத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றார் பாத்திமா.

சீக்கியர்களின் தலைப்பாகை-டர்பனுக்கு தடை விதிக்க தைரியம் இல்லாத 'மோடி' அரசு, முஸ்லிம்களை பழிவாங்க துடிப்பதை ஒருபோதும் அனுமதியோம் என்று கோரசாக குரல் கொடுக்கின்றனர் முஸ்லிம் மாணவிகள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -