அரசியலும் வேண்டாம் அமெரிக்காவும் வேண்டாம் - கோத்தபாய

திர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிட போவதாக பரவி வரும் வதந்தி தொடர்பாக பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த சிலர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக தான் தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் மக்களுக்கு சேவையாற்ற நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அவசியமற்றது எனவும் கோத்தபாய கூறியுள்ளார்.

அத்துடன் எதிர்காலத்திலும் நாட்டுக்காக எந்த அர்ப்பணிப்பையும் மேற்கொள்ள தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க பிரஜையாக இருப்பதால், தேர்தலில் போட்டியிட தயங்குகிறீர்களா என ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள கோத்தபாய, அப்படியான தடைகள் இல்லை எனவும் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ய தேவையான ஆவணங்களை தாம் அமெரிக்க தூதரகத்திடம் கையளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -