எம்.வை.அமீர்-
மருதம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி பிரசார இணைப்புச் செயலாளரும் முஸ்லிம் சமய, கலாசார அமைச்சின் இணைப்பாளருமான செயிட் அஸ்வான் சக்காப் மௌலானா தலைமையில் 2015-07-05 ல் சாய்ந்தமருதில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இப்தார் நிகழ்வும்கலைக்கூடல் மன்றத்தின் ஒன்றுகூடலும் இடம்பெற்றது.
நிகழ்வில் ஓய்வுபெற்ற கல்வி அதிகாரிகளான எம்.ஐ.ஏ.ஜப்பார் மற்றும் ஏ.பீர்முகம்மட் ஆகியோரும் மருதம் கலைக்கூடல் மன்றத்தின் உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் இப்பிராந்திய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் பேஷ் இமாம் மௌலவி எம்.ஐ.ஆதம்பாவா ஷர்க்கி அவர்களால் இஸ்லாமிய நற்போதனை நிகழ்வும் இடம்பெற்றது.

