எனது மனைவி ஒரு முஸ்லீம் - ரவி கருநாயக்க

அஸ்ரப் ஏ சமத்-

னது மனைவி ஒரு முஸ்லீம் பாத்திமா ரவி கருநாயக்க எனக்கு முஸ்லீம்களது மத,தொழுகை கலை கலாச்சார விடயங்களும் அனைத்தும் தெரியும். ஆனால் கடந்த கால அரசு பள்ளிவாசல்களை முஸ்லீமகளது கலை கலாச்சார விடயங்களை சீரலித்தது. அந்த யுகத்தை மீள வரமுடியாமல் நாம் தடுக்க வேண்டும்.

அது மட்டுமா முஸ்லீம்களது வா்த்தகத்தையும் சீரலித்தாா்கள். முஸ்லீம் ஒருவா் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்தால் கூடுதலான சுங்கத் தீர்வை மற்றும் இடைஞ்சல்களை ஏற்படுத்தினாா்கள். ஆனால் நான் நிதி யமைச்சராக வந்த பிறகு முஸ்லீம்களுக்கு தமது வியாபாரத்தை செய்வதற்கு எவ்வித பிரச்சினையும் இருக்காது. என நிதியமைச்சா் ரவி கருநாயக்க தெரிவித்தாா்.

தெஹிவளை பீரிஸ் பிளேசில் உள்ள தாருல் அக்ரம் மத்ரசாவில் நேற்று (11) இப்தாா் நிகழ்வில் நிதியமைச்சரும் ஜ.தே.கட்சி உப தலைவருமான ரவி கருநாயக்க கலந்து கொண்டாா்.

அத்துடன் இந்த மத்ரசா கூட தொழுகை நடாத்த முடியாமல் மத்ரசாவாகவே இயங்கி வருகின்றது. கடந்த காலத்தில் சிலா் முறையிட்டதனால் இந் நிலையில் உள்ளதாகவும் அமைச்சருக்கு அஸ்ரப் ஹூசைன் விளக்கிக் கூறினாா்.

அத்துடன் மெலவிமாா்களுக்கு பெருநாள் பணப்பரிசில்களும் அன்பளிப்புக்களும் அமைச்சா் ரவியினால் வழங்கி வைக்கப்பட்டது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -