சிங்களக்கொடி வேறு தேசியக்கொடி வேறு - பொதுபல சேனா

லங்கையில் சிங்களக் கொடியான சிங்கக்கொடியை சில ஊடகங்கள் இனவாத நோக்குடன் பார்ப்பதை ஆட்சேபித்து பொதுபல சேனா நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

இதன்போது கருத்துரைத்த பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே, சிங்களக்கொடி தேசிய கொடியில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்று குறிப்பிட்டார்.

எனவே இது தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் குறைகூறுவோர் நாட்டின் கலாசாரம் மற்றும் வரலாறு தொடர்பில் தெளிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

1815ம் ஆண்டு பிரித்தானியர்கள் சிங்கள சிங்கக்கொடியை 1948ம் ஆண்டு வாரியபொல சுமங்கல தேரர் மீண்டும் ஏற்றினார்.

இது அப்போதைய பிரதமர் டி எஸ் சேனாநாயக்கவினால் ஏற்றிவைக்கப்பட்டது.

எனினும் அது இனவாத அடிப்படையில் பார்க்கப்படுகிறது என்று திலந்த குற்றம் சுமத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -