ஜாதிக பலசேனாவின் தலைவரும் நவ சம சமாஜக் கட்சியின் வேட்பாளருமான வட்டரக்க விஜித்த தேரருக்கு எதிராக பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர், பொலிஸ் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை முறைப்பாடு செய்துள்ளார்.
தேசியக் கொடி தொடர்பில் ஜாதிக பலசேனாவின் தலைவரும் நவ சம சமாஜக் கட்சியின் வேட்பாளருமான வட்டரக்க விஜித்த தேரர் தெரிவித்ததாக கூறப்படும் கருத்து தொடர்பில் இதுவரையிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் இதுவரையிலும் முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை என்றும் முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.
தேசியக் கொடி விவகாரம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டுள்ள போதிலும் முறைப்பாடுகள் எதுவும் இதுவரையிலும் செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
வட்டரக்க விஜித்த தேரர் கூறியதாக கூறப்படும் கூற்றுதொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள போதிலும் முறைப்பாடுகள் இன்றி விசாரணைகளை முன்னெடுக்கமுடியாது என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜாதிக பலசேனாவின் தலைவரும் நவ சம சமாஜக் கட்சியின் வேட்பாளருமான வட்டரக்க தேரர், தேசியக்கொடிக்கு தீ வைக்கவேண்டும் என்றும் இது இனங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் கூறி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
