முஸ்லிம் காங்கிரஸ் தனித்து கேட்பது ஆசனங்களை கூடுதலாக பெறுவதற்கே..!

எஸ்.அஷ்ரப்கான்-

ம்முறை பொதுத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து கேட்பதே ஆசனங்களை கூடுதலாக பெறுவதற்கு வழிவகுக்கும் மாறாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேரும்போது அக்கட்சிக்கே மேலதிக ஆசனங்கள் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது என அம்பாரை மாவட்ட மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அபிமானிகள் இன்று (04) வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தேர்தல் களம் தொடர்பாக அவர்கள் மேலும் குறிப்பிடும்போது,

அம்பாரை மாவட்டத்தில் அஷ்ரப் அவர்கள் அப்போது வகுத்த தேர்தல் வியூகம் அக்காலத்தில் வெற்றியளித்தது. அது முஸ்லிம் சமூகத்திற்கு பிரயோசனமளித்தது. ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் இறங்கும்போது அது சிங்கள பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமே ஒழிய முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்காது.

அரசியல் தலைவர்களின் எதிர்பார்ப்பின்படி பெரும்பான்மை ஐக்கிய தேசிய கட்சியில் 5 பேர்களும், முஸ்லிம் காங்கிரஸில் 5 பேர்களுமாக களத்தில் நிற்கும்போது, இதில் 2 பேர் தமிழ் முஸ்லிம்களும், 3 பேர் சிங்களவர்களுமாகும். இந்நிலையில் 3 சிங்களவர்களுக்கும் விருப்பு வாக்குகள் வழங்கப்படும்போது அதிக வாக்குகளை சிங்களவர்களே பெற்றுக்கொள்வர். எல்லா வாக்குகளும் ஐக்கிய தேசிய கட்சிக்கு வரும்போது பெரும்பான்மை பலமே அதிகரிக்கும். இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதித்துவம் குறையும் வாய்ப்பே அதிகமாகும்.

எனவேதான் மு.கா. தனித்து கேட்பதனுடாகவே அதிகபட்ச ஆதரவாளர்களின் வாக்குகளை பெறலாம். ஒவ்வொரு ஊர்களிலும் வேட்பாளர்களை நிறுத்தும்போது ஆதரவாளர்களும் வாக்களிப்பார்கள். 

அப்போதுதான் அதிகபட்சமாக 3 ஆசனங்களையேனும் மு.கா. பெறும் நிலை காணப்படும் எனவே இந்நிலை உணர்ந்து மு.கா. தனித்து கேட்கவேண்டும் என்ற முடிவை அம்பாரை மாவட்டத்தில் எடுப்பதுதான் சிறந்தது என்பதை தெரிவித்துக்கொள்ள வரும்புகின்றோம் என்றும் குறிப்பிடுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -