மஹிந்த தரப்பை வெளியேற்ற மைத்திரி – ரணில் ரகசிய ஒப்பந்தம்....?

ஹிந்த தரப்பை அரசியலில் இருந்து வெளியேற்றுவதற்காக, மைத்திரி – ரணில் ரகசிய ஒப்பந்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக மிகவும் நம்பத்தகுந்த அரசியல் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த இணக்கப்பாடு இந்திய அரசாங்கத்தின் தலையீட்டில் இடம்பெறுவதாகவும் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆற்றிய உரையும் இந்த இணக்கப்பாட்டுக்கு அமைய இடம்பெற்ற ஒன்றாகும்.

ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய உரை தொடர்பில் ஜனாதிபதிக்கு நெருங்கியவர்களை காட்டிக்கொடுக்கவில்லை. எனினும் பிரதமர் இது தொடர்பில் முழுமையான அவதானத்துடன் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையினுள் உள்நாட்டு போர் நிலைமையை ஏற்படுத்தாமல் சர்வதிகார ஆட்சியை மாற்றுவதற்கு ஆட்சியை கைப்பற்றிக் கொள்வதற்காகவும், அதனை நடத்தி செல்வது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட நடைமுறையிலான ஜனநாயக ஆட்சி முறை தொடர்பில் சர்வதேச பல்கலைக்கழக அளவிலான ஆய்வுகள் மூலம் விருதுகள் கிடைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -