பொதுத்தேர்தலில் 6151 பேர் போட்டி..!

திர்வரும் ஒகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 22 மாவட்டங்களில் இருந்தும் இம்முறை 6151 பேர் போட்டியிடுகின்றனர்.

225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான போட்டியில் இம்முறை 22 மாவட்டங்களில் அரசியல் கட்சிகளும் சுயேட்சை அணிகளும் நேரடியாகவே களமிறங்கியுள்ளன.

இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் 537 வேட்பு மனுக்கள் நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டு, அவற்றில் 36 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் மொத்தமாக 501 வேட்புமனுக்களே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அரசியல் கட்சிகள் 312 வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்த நிலையில், அவற்றில் 12 நிராகரிக்கப்பட்டு, 300 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

சுயேட்சைகள் தாக்கல் செய்த 225 வேட்பு மனுக்களில் 24 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் இம்முறை அரசியல் கட்சிகளில் இருந்து 3653 பேரும், சுயேட்சைக் குழுக்கள் சார்பாக 2498 பேரும் பாராளுமன்றத்திற்கு போட்டியிடுகின்றனர்.டெய்லிசிலோன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -