(அட்டாளைச்சேனை) ரமழான் விசேட உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு..!

பி. முஹாஜிரீன்-

டந்த கால யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை ஹூஸைனியா நகர் மற்றும் சின்னப்பாலமுனை ஆகிய கிராமங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு ரமழான் விசேட உலர் உணவுப் பொதிகள் நேற்று திங்கட்கிழமை (13) வழங்கி வைக்கப்பட்டன.

சின்னப்பாலமுனை சீட்ஸ் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தினால் இவ் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

சீட்ஸ் அமைப்பின் தலைவரும், பிரதி அதிபருமான பி. முஹாஜிரீன் தலைமையில் சீட்ஸ் அலுவலகத்தில் நடைபெற்ற வைபவத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொதிகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தின் வெளிக்கள மேற்பார்வை மதிப்பீட்டு உத்தியோகத்தர் எஸ்.எம். இப்றாஹிம், ரமழான் திட்டப் பொறப்பாளர் எம். ஹ_ஸைன், சீட்ஸ் அமைப்பின் ஆலோசகர் எம்.எஸ்.எம். ஹனீபா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எச். தம்ஜித், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். ஹைதர் ஆகியோர் உட்பட உட்பட இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.

100 குடும்பங்களைச் சேர்ந்த பயாளிகளுக்கு தலா 3 ஆயிரத்தி 500 ரூபாய் பெறுமதியான அரிசி, சீனி, பால்மா, கருவாடு போன்ற உலருணவுப் பொருட் தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டன.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -