தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பு மனு நேற்று (13)அம்பாறை கச்சேரியில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட பலர் விண்ணப்பித்திருந்தனர் பலத்த போட்டி நிலவியதால் வேட்பாளர் தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதில் இழுபறி நிலை காணப்பட்டது.
நேற்று முந்தினம் அம்பாறைக்கு சென்றிருந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, செயலாளர் துரைராஜசிங்கம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமத்திரன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன் ஆகியோர் மேற்கொண்ட பல சுற்று ஆலோனைக் கலந்துரையாடலின் பின்னர் வேட்பாளர் தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்பட்டு வேட்புமனுவும் தாயரிக்கப்பட்டிருந்தன.
நேற்று காலை அம்பாறைக் கச்சேரியில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
01. தலைமை வேட்பாளர் – கென்றி மகேந்திரன் – கல்முனை
02.அரியநாயகம் சந்திரநேரு சந்திரகாந்தன் – திருக்கோவில்
03.மார்க்கண்டு குணசேகரம் சங்கர் – பொத்துவில்
04.சிந்தாத்துரை ஜெகநாதன் – தம்பிலுவில்
05.தவராசா கலையரசன் – நாவிதன்வெளி
06.அன்னம்மா கோவிந்தபிள்ளை – சேனைக்குடியிருப்பு கல்முனை
07.வைரமுத்து அருளம்பலம் – தம்பிலுவில்
08.யோகேந்திரன் கோபிகாந் – காரைதீவு
09.முருகேசு நடேசலிங்கம் – காரைதீவு
10.கவீந்திரன் கோடீஸ்வரன் ( றொபின்) – அக்கரைப்பற்று
