SPBக்கு ஹரிவராசனம் விருது!

யப்பன் குறித்து யேசுதாஸ் பல பக்திப் பாடல்கள் பாடியுள்ளார். அதில் ஒரு பாடல், ஹரிவராசன் என ஆரம்பிக்கும். ஹரிவராசனம் பெயரில் விருதும் வழங்கப்படுகிறது.

இந்திய திரையுலகில் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் பாடி, இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் சாதனையாளராக திகழும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு, சபரிமலை ஐயப்பனின் பெருமையையும், புகழையும் விளக்கும் பல பாடல்களை பாடி மதச்சார்பின்மை மற்றும் சர்வதேச சகோதரத்துவத்தை வலியுறுத்தி சேவை செய்தமைக்காக ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.

ஐயப்பன் சந்நிதான வளாகத்தில் இந்த விருதை கேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர் சிவகுமார் பாலசுப்பிரமணியத்துக்கு வழங்கினார்.

“ஒரு பாடகராக கடந்த 50 ஆண்டுகளில் எத்தனையோ விருதுகளை பெற்றுள்ளேன். அவை அனைத்திலும் இந்த ஹரிவராசனம் விருதை மிகவும் சிறந்த விருதாக கருதுகிறேன். மத நல்லிணத்துக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாக சுவாமி ஐயப்பன் ஆலயம் விளங்குகின்றது. ஐயப்பனின் புகழை இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நான் பக்திப் பாடல்களாக பாடியுள்ளேன். எனினும், ஐயப்பனின் இந்த சந்நிதானத்துக்குள் நுழைவது இதுவே முதல்முறை என்று” விருது பெற்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -