நடிகர் விஜய்க்கு இன்று 41 ஆவது பிறந்த நாள்…!

குழந்தை நட்சத்திரமாய் ‘வெற்றி’ படத்தில் அறிமுகமாகி இன்றுவரை எந்த தலைக்கணமும் இல்லாமல் வெற்றி மகுடத்தை தலையில் சுமந்து வரும் இளையதளபதி விஜய்-க்கு இன்று பிறந்தநாள். தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் அழகிய தமிழ் மகனாய் இன்றும், விஜய் வாழ்ந்து வருகிறார்.

ஒரு இயக்குனரின் மகன் என்பதால் திரையுலகில் எளிதாக நுழைந்துவிட்டார் என்றெல்லாம் இவரைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. அவருடைய உண்மையான உழைப்புதான் ஒவ்வொரு ரசிகனின் இதயத்திலும் அவரை ஆழமாக பதிய வைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் ‘கில்லி’ விஜய், இன்று 41-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இவரது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பினரும் விழாவாக எடுத்து கொண்டாடி வருகின்றனர்.

விஜய்யின் பிறந்தநாளான இன்று அவரது மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் உள்ள சினிமா நட்சத்திரங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர்களுடன் இம்போர்ட் மிரரும் இணைந்து விஜய்-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறது.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் தற்போது நடித்துள்ள ‘புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் விஜய் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -