எம்.எம்.ஜபீர்-
கல்முனைக்குடி பிரதேசத்தில் அல்-கிம்மா சமூக சேவை நிறுவனத்தின் அணுசரனையில் 50 வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு நேற்று வழங்கி வைக்கப்பட்டது.
இலவச குழாய் குடிநீர் இணைப்பை திறந்து வறிய மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹூமத் மன்சூர் அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் அல்-கிம்மா சமூகசேவை நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் எச்.எம்.ஜாபீர், அல்-கிம்மா நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.(ந)




