பொதுத் தேர்தலை கண்காணிக்க, வௌிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு!

லங்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலை கண்காணிக்க, வௌிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறைந்தது 50 வௌிநாட்டுக் கண்காணிப்பாளர்களையாவது இம்முறை தேர்தலுக்காக அழைக்க எதிர்பார்த்துள்ளதாக பெப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது. 

தாய்லாந்தின் சுதந்திரமான தேர்தலுக்கான ஆசிய வலையமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய அமைப்புக்களில் இருந்து தேர்தல் கண்காணிப்பாளர்களை அழைக்கவுள்ளதாக, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, பொதுத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய ஜனநாயக நிறுவனம் மற்றும் வேறு சில அமெரிக்க நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -